திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய கணிதப் பாட  ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து குறித்த ஆசிரியர் இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென குறிப்பிட்டு  மாணவர்கள் இன்று (21) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்

பாடசாலையின் பிரதான முன் கதவை அடைத்து மாணவர்கள் வீதியில் அமர்ந்த வண்ணம், வாகனங்கள் செல்ல விடாது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர் .இதன்போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பியந்த பத்திரண, பாடசாலைப் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு நிர்வாக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்

பொலிசார் ஆர்ப்பாட்டத்தை கலைக்க முற்பட்ட போதும் ஆர்ப்பாட்டத்தினை கலைக்க முடியாது போனது

கணிதப் பாட ஆசிரியர் இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமெனவும் "வேண்டும் வேண்டும் கணித பாட ஆசிரியர் வேண்டும்" என மாணவர்கள் கோஷம் எழுப்பினர்

காலை 7 மணியிலிருந்து 10 மணி வரையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

ஆர்பாட்டத்தினை கட்டுப்படுமுகமாக கல்வித் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து தன்னுடைய பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரின் இடமாற்றம் ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் கப்பல் துறை சரஸ்வதி வித்தியாலயத்தில் கடமையினன  பொறுப்பெடுக்கும் படி அறிவித்துள்ளதாக தெரிவித்தனர்

இதன் பின்னர் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது மாணவர்கள் பாடசாலையினுள் சென்றனர்