தெஹிவளை - மிருகக் காட்சிச்சாலையிலுள்ள மிருகங்களுக்கு இந்த மாதம் முதல் பார்வையாளர்களினால் உணவளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிருகக் காட்சிச்சாலையிலுள்ள மிருகங்களுக்கு உணவளிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதாக, மிருகக் காட்சிச்சாலையின் பிரதிப் பணிப்பாளர் அனோமா பிரியதர்ஷனி தெரிவித்துள்ளார்.
மிருகங்களுக்குப் பொருத்தமற்ற உணவு வகைகளை பார்வையாளர்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் மிருகக் காட்சிச்சாலையினுள்ளேயே உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிருகங்களுக்குப் பொருத்தமற்ற உணவுவகைகளை வழங்குவதால், விலங்கினங்கள் நோய் வாய்ப்படும் சந்தர்ப்பம் காணப்படுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் கலந்த உணவு வகைகள் காரணமாகவும், சில வேளைகளில் பிளாஸ்ரிக் பைகளை உட்கொள்வதனாலும் மிருகங்கள் நோய் வாய்ப்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், பார்வையாளர்கள் கொண்டு வரும் உணவு வகைகள் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதோடு, மிருகக் காட்சிச்சாலையிலிருந்து அவர்கள் விரும்பும் வகையில் ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளை விலங்கினங்களுக்காகப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM