மன்­னாரில் அண்­மை­கா­ல­மாக முப்­ப­டை­யி­னரும் பாது­காப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருக்கும் நிலையில் வீடு­களில் கொள்ளை சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வ­துடன் கொள்­ளை­யிடும் இடங்­களில் வீட்டார் தாக்­கப்­படும் சம்­ப­வங்­களும் இடம்பெற்று வரு­கின்­றன.

அத்­துடன் மன்­னா­ரி­லி­ருந்து வெளி­மா­வட்­டங்­க­ளுக்குச் செல்லும் பிர­யா­ணிகள் சோதனை என்ற போர்­வையில் நீண்ட தூரம் நடந்து செல்லும் நிலை­மையும் காணப்­ப­டு­கி­றது.எனவே, இந்த விட­யங்கள் தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட வேண்டும் என்று மன்னார் பிர­ஜைகள் குழு­வினர் தள்­ளாடி இரா­ணுவ முகாம் பிரி­கே­டியர் சுபாஜானா வெலிக்­க­ல­விடம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

மன்னார் மாவட்ட பிர­ஜைகள் குழுவின் ஆளுநர் சபை­யா­னது இதன் தலைவர் அருட்­பணி ஏ.ஞானப்­பி­ர­காசம் அடி­களார் தலை­மையில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­பகல் 54 ஆவது பிரிவு மன்னார் தள்­ளாடி இரா­ணுவ முகாம் பிரி­கே­டியர் சுபாஜானா வெலிக்­க­லவை தள்­ளாடி முகாமில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர்.

இந்தச் சந்­திப்­பா­னது மன்னார் மாவட்ட மக்­களால் மன்னார் மாவட்ட பிர­ஜைகள் குழு­விடம் முன்­வைக்­கப்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வைக் காணும் நோக்கில் அமைந்­தி­ருந்­தது.

சந்­திப்­பின்­போது மன்னார் பகு­தி­யி­லுள்ள இரா­ணுவம் மன்னார் பகு­தியில் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை பொது­மக்­க­ளுக்கு மேற்­கொண்டு வரும் செயற்­பா­டுகள் தொடர்­பி­லான விப­ரணப் படம் திரையில் பிர­ஜைகள் குழு­வுக்கு காண்­பித்­தது. இதைத் தொடர்ந்து பிர­ஜைகள் குழு­வினர் மக்­களின் மற்றும் மாவட்­டத்தின் தேவைகள் சம்­பந்­த­மான மகஐர் ஒன்­றையும் பிரி­கே­டி­ய­ரிடம் கைய­ளித்­தனர்.

இதன்பின் இரு பகு­தி­ன­ருக்­கு­மி­டையே இடம்­பெற்ற உரை­யா­ட­லின்­போது மன்னார் பிர­ஜைகள் குழு­வினர் கருத்­து­ரைக்­கையில்,

மன்னார் பிர­யா­ணிகள் வெளி­மா­வட்­டங்­க­ளுக்கு பிர­யாணம் செய்­யும்­போது குறிப்­பாக செட்­டிக்­குளம் பகு­தி­யி­லுள்ள ஆண்­டியா, புளி­யங்­குளம் பகு­தியில் இரா­ணு­வத்­தினர் பரி­சோ­த­னை­க­ளுக்­காக வாக­னங்­க­ளி­லி­ருந்து மக்­களை இறக்கி நீண்ட தூரம் கால்­ந­டை­யாக நடந்து வரு­மாறு கூறு­கின்­றனர்.

அத்­துடன் கடந்த காலத்­தை­விட தற்­பொ­ழுது அதி­க­மான சோதனைச் சாவ­டி­களை இரா­ணு­வத்­தினர் ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­பதால் இது மக்கள் மத்­தியில் சற்று அச்­ச­நிலையை தோற்­றி­வித்­துள்­ளது.

ஆகவே, இவற்றை தேவை­யற்ற இடங்­களில் சற்று குறைத்தால் பிர­யா­ணி­களின் போக்­கு­வ­ரத்­துக்கு அசௌ­ரி­யங்கள் ஏற்­ப­டா­தி­ருப்­ப­துடன் மக்கள் மத்­தியில் இரா­ணு­வத்­தினர் தொடர்ந்து இருந்­து­வரும் அச்­ச­நிலை தணி­யக்­கூ­டிய வாய்ப்­புக்கள் இருக்கும் எனவும் இங்கு சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. மன்னார் தீவு கடல் மட்­டத்­துக்கு கீழ் இருப்­பதால் இப் பகு­தியில் மணல் அகழ்வு மிக மோச­மான நிலையில் இடம்­பெற்று வரு­கின்­றது. இன்­றைய அரசு ஆட்­சிக்கு வந்­தபின் பொலி­ஸா­ருடன் இரா­ணு­வத்­துக்கும் அதி­கா­ரங்கள் சில வழங்­கப்­பட்­டுள்­ளன.

ஆகவே, மன்னார் தீவி­லி­ருந்து மணல் அகற்­றப்­ப­டு­வதை நிறுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ளும்­ப­டியும் வேண்­டப்­பட்­டது. இரா­ணுவ பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டபின் மன்னார் மாவட்­டத்தில் பர­வ­லாக கொள்ளைச் சம்­ப­வங்கள் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யுள்­ளன. அதுவும் இரவு வேளை­களில் வீடு­க­ளுக்குள் உட்­புகும் கொள்­ளை­யர்கள்,  கொள்­ளை­ய­டிப்­ப­துடன் நின்றுவிடாது வீட்­டி­லுள்­ள­வர்­களை தாக்கும் சம்­ப­வங்­களும் இடம்­பெற்று வரு­கின்­றன.

ஆகவே,  இரா­ணுவ பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்ட நிலையில் இவ்­வா­றான சம்­பவங்கள் இடம்­பெ­று­வதால் சில சமயம் மக்கள் மத்­தியில் இரா­ணு­வத்­தினர் மீதும் வீணான சந்­தேகம் உரு­வாகும் நிலையும் தோன்­றி­யுள்­ள­தாக இங்கு சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. மன்னார் இரண்டாம் கட்­டையில் இயங்கி வந்த ஆடை தொழிற்­சாலை தற்­பொ­ழுது மூடப்­பட்ட நிலையில் காணப்­ப­டு­கின்­றது.

இத்தொழிற்­சா­லையை மீண்டும் இயக்­கு­வ­தற்கோ அல்­லது இப்­ப­கு­திக்கு பொருத்­த­மான தொழிற்­சா­லை­யாக இயக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கையை மேற்­கொள்­வதன் மூலமோ இப்­ப­கு­தியில் வேலை­யற்று இருக்கும் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு வேலைவாய்ப்­புக்கள் உரு­வாகும் நிலையை சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுடன் கலந்­தா­லோ­சித்து மேற்­கொள்­ளும்­ப­டியும் வேண்­டப்­பட்­டது.

மன்னார் பொது வைத்­தி­ய­சா­லையின் வளா­கமும் இதன் சுற்­றா­டலும் புற்­செ­டி­களால் காடுகள் போல் வளர்ந்து காணப்­ப­டு­வதால் டெங்கு அபா­யமும் ஏற்­பட்­டுள்­ளது. இதனால் முடிந்­த­ளவு இரா­ணு­வத்­தி­ன­ரையும் வைத்­தி­ய­சாலை ஊழி­யர்கள், பொது மக்­களையும் இணைத்து சிர­ம­தா­னங்­களை மேற்கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­வது நல­மாக அமையும் எனவும் ஆலோ­சனை வழங்­கப்­பட்­டது.

அத்­துடன் மன்னார் மாவட்­டத்­துக்கு மன்னார் பொது வைத்­தி­ய­சா­லையே பிர­தான வைத்­தி­ய­சா­லை­யாக இருப்­பதால் இவ் வைத்­தி­ய­சாலை தரம் உயர்த்­தப்­பட வேண்­டிய அவ­சியம் காணப்­ப­டு­கின்­றது. இப்போது வைத்­தி­ய­சாலை மாகாண சபைக்கு உட்­பட்டு இருப்­பதால் இது அபி­வி­ருத்தி காண்­பதில் பின்­ன­டை­வையே சந்­தித்­துள்­ளது.

தொற்றா நோய்­க­ளுக்­கான வைத்­திய நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­பட வேண்­டிய அவ­சியம் இருப்­ப­தா­கவும் இவ் வைத்­தி­ய­சா­லையில் ஆளனி பற்­றாக்­கு­றை­களும் காணப்­ப­டு­வதால் ஏனைய மாவட்­டங்­க­ளி­லுள்ள மத்­திய அர­சாங்க வைத்­தி­ய­சா­லையைப் போன்று இதனையும் தரம் உயர்த்­து­வ­தற்­கான முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொள்­ளும்­ப­டியும் இக்கலந்­து­ரை­யா­டலில் தெரி­விக்­கப்­பட்­டது.

அத்­துடன் மன்னார் தீவு பகு­தியில் பனை மரங்கள் மற்றும் காடுகள் அழிக்­கப்­பட்டு வரு­வதால் தீவு அபா­ய­க­ர­மான நிலைக்கு தள்­ளப்­ப­டு­வதால் இப்பகு­தியில் மாற்று செயல்­பா­டாக பனை மரங்கள் நடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

பொது மக்களுக்கு அதிகமாக பாதுகாப்பாக பொலிசாரே கடந்த காலங்களில் கடமைகளில் ஈடுபட்டு வந்தபோதும் தற்பொழுது முப்படைகளும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகவே, சில சமயம் கிராமப்புறங்களில் மக்கள் மத்தியில் மறைமுகமான அச்சநிலை காணப்பட்டு வருவதால் அடிக்கடி கிராமபுற மக்களு டன் பாதுகாப்புப் படையினர் சிவில் அதிகாரிகளு டன் சந்திப்பை ஏற்படுத்தி அவர்களின் மனநிலை களையும் அறிந்து வருவது ஆரோக்கிய மானதாக இருக்கலாம்.

அத்துடன் மாதாந்தம் ஒருமுறையாவது மன்னார் பிரஜைகள் குழுவுடன் இவ்வாறான சந்திப்பை ஏற்படுத்துவது நலம் எனவும் தெரிவிக்கப்பட்டது.