(இரா­ஜ­துரை ஹஷான்)

பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  ரஞ்சன்  ராம­நா­யக்­க­வுடன் தொலை பேசியில் துறைக்கு பொருத்­த­மற்ற விதத்தில் உரை­யா­டி­யுள்ள  பி.பி.சி.யின்  கொழும்பு செய்­தி­யா­ளரை  பி.பி.சி. யின் நிர்­வாக குழு  உட­ன­டி­யாக சேவையிலிருந்து நீக்க  வேண்டும் என்ற கோரிக்­கை­யினை விடுப்­ப­துடன்  இந்த செய்­தி­யா­ள­ருக்கு எதி­ராக  நட­வ­டிக்­கை­கள்   உள்ளூர் மட்­டத்­திலும் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என    வியத்­மக  அமைப்பின் உறுப்­பினர்  சட்­டத்­த­ரணி  ராஜா குண­ரத்ன தெரி­வித்தார்.
வியத்­மக அமைப்பின் காரி­யா­ல­யத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில்,

பௌத்த மத­கு­ரு­மார்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை எவ்­வாறு மேற்­கொள்ள வேண்டும் என பி.பி.சி ஊடக சேவையின் கொழும்பு  செய்­தி­யாளர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்­க­விற்கு   ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். இந்த குரல் பதி­வுகள் தற்­போது சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யா­கி­யுள்­ளன. இந்த செய்­தி­யாளர் கடந்த காலங்­களில் தொடர்ந்து ஐக்­கிய தேசிய கட்­சிக்கு ஆத­ர­வா­கவே செயற்­பட்டார். பி.பி.சி.  ஊடக சேவையின் கொழும்பு   செய்­தி­யாளர் குறித்து நிறு­வ­னத்தின்  நிர்­வாக சேவை உட­ன­டி­யாக  நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். உள்ளூர்  ஊட­கங்கள் ஏதும் இவ்­வாறு  நாட்­டுக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்தும் வித­மாக  செயற்­ப­ட­வில்லை.

இவரால் இது­வரை காலமும் பி.பி.சி. க்கு  வழங்­கப்­பட்ட செய்­திகள் உண்­மை­யா­னதா என்ற சந்­தேகம் தோற்றம் பெற்­றுள்­ளது. ஊட­கங்கள் மக்­களின் தேவை­க­ளுக்­காக மாத்­திரம் செயற்­பட வேண்டும். அர­சி­யல்­வா­தி­களின் விருப்­பத்­திற்கு இணங்க செயற்­ப­டு­வது ஊட­கங்­களின்  செயற்பாடு அல்ல.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இரண்டு பிரதான ஊடகங்கள் மாத்திரமே மக்களுக்கு உண்மைத் தன்மையினை தொடர்ச்சியாக   வழங்கின என்பதை குறிப்பிட வேண்டும் என்றார்.