மண்­ட­லமும் பாதையும் (Belt and Road Initiative) செயற்­றிட்­டத்தின் கீழ் இலங்­கைக்கும் சீனா­வுக்கும் இடை­யி­லான முக்­கி­ய ஒரு திட்­ட­மான கொழும்பு துறை­முக நகரம் (Port City Colombo) உள்ளூர் சமூ­கங்­க­ளுக்கும் சுற்­றுச்­சூ­ழ­லுக்கும் ஆத­ர­வாக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­ களை விளக்கும் முத­லா­வது சமூ­கப்­பொ­றுப்பு அறிக்­கையை (Social Responsibility Report) வெளி­யிட்­டி­ருக்­கி­றது.

இது தொடர்­பி­லான நிகழ்வு சில தினங்­க­ளுக்கு முன்னர் கொழும்பில் நடை­பெற்­றது.நகர அபி­வி­ருத்தி, நீர் விநி­யோகம் மற்றும் வீட­மைப்பு அமைச்சின் செய­லாளர் பிரியத் பண்டு விக்­கி­ரம, நகர அபி­வி­ருத்தி இரா­ஜாங்க அமைச்சர் காமினி லொக்­குகே, இலங்­கைக்­கான சீனத்­தூ­துவர் ஷெங் சியூ­யுவான், சீன தொடர்­புகள் நிர்­மாணக் கம்­ப­னியின் (China Communications Construction Company) விளம்­ப­ரப்­பி­ரிவின் தலைவர் லியூ யான் மற்றும் கொழும்பு துறை­முக நக­ரத்தின் திட்­டப்­ப­ணிப்­பாளர் நிஹால் பெர்­னாண்டோ ஆகியோர் அதில் கலந்­து­கொண்­டனர்.

சீனா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான உடைக்­க­ மு­டி­யாத நட்­பு­றவைப் பற்றி குறிப்­பிட்ட தூதுவர் ஷெங் சியூ­யுவான், இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை புதிய உச்­சங்­க­ளுக்கு கொண்­டு­செல்­லப்­போகும் மண்­ட­லமும் பாதையும் செயற்­றிட்­டத்தின் கீழான முக்­கி­ய­மான ஒரு திட்­டமே கொழும்பு துறை­முக நகரம் என்று கூறினார். "மண்­ட­லமும் பாதையும் செயற்­றிட்டம் பற்­றிய புரிந்­து­ணர்வை ஆழ­மாக்­கு­வ­தற்­கான எமது அபி­லா­ஷைக­ளுக்கு உண்­மையில் மான­சீ­க­மா­னதாக சீனா தொடர்ந்து இருந்­து­ வ­ரு­கி­றது. அதன் சமூ­கப்­பொ­றுப்­பு­களை நிறை­வேற்­று­வதில் தீவி­ர­மாக செயற்­ப ட்டு வரு­கி­றது. மக்­க­ளுக்கு நன்­மை­ப­யக்­கக்­கூ­டிய வகையில் சமூ­கத்­துக்கு திருப்­பிக்­கொ­டுப்­பதில் அக்­ கறை காட்­டு­கிறது" என்று ஷெங் கூறினார்.

உள்ளூர் தேவை­க­ளையும் மூல­வ­ளங்­க­ளையும் கருத்­திற்­கொண்டே கொழும்பு துறை­மு­க­ ந­கரின் நிர்­மாணம் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என்று லியூ யான் கூறினார். உள்­ளூர் ­வா­சி­க­ளுக்கு தொழில் ­வாய்ப்­பு­க்களைக் கொடுப்­பதில், திற­மை­யு­டை­ய­வர்­க­ளுக்கு பயிற்­சி­ய­ளிப்­பதில், தொழில்­நுட்­பத்தை மாற்­றீடு செய்­வதில், உள்ளூர் கைத்­தொ­ழில்­களை தய­மு­யர்த்­து­வதில், சுற்­றுச்­சூழல் பாது­காப்பை மேம்­ப­டுத்­து­வதில், அர­சாங்க அதி­கா­ரி­க­ளுடன் ஒத்­து­ழைத்துச் செயற்­ப­டு­வதில் கம்­பனி அக்­கறை காட்டிச் செயற்­ப­டு­கி­றது என்றும் அவர் சொன்                                     னார்.

பெரு­ம­ளவு செல்­வத்­தையும் பொருள்­வ­ளத்­தையும் கட்­டி­யெ­ழுப்பும் வீதி­களை, மக்­க­ளுக்கிடை­யி­லான பரி­மாற்­றங்­களை மேம்­ப­டுத்­து­கின்ற பாலங்­களை, அபி­வி­ருத்­தியை ஊக்­கு­விக்கும் துறை­மு­கங்­களை, மக்­களின் மகிழ்ச்­சியை அதி­க­ரிக்­கின்ற நக­ரங்­களை நிர்­மா­ணிப்­பதில் தங்­க­ளது கம்­பனி பற்­று­று­தி­யுடன் செயற்­ப­டு­வ­தாக லியூ மேலும் சொன்னார்.

கடலிலிருந்து மீட்­கப்­பட்ட 269 ஹெக்­டெயர் நிலப்­ப­ரப்பின் பெரி­ய­தொரு பாகம் உள்ளூர் மக்கள் அனு­ப­விப்­ப­தற்­கான பொது இடப்­ப­ரப்­பாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­ட­வி­ருப்­பதால் துறை­முக நக­ரத்­திட்­டத்தின் ஆரம்­பக்­கட்ட நிர்­மாணப் பணிகள்கூட சமூ­கப்­பொ­றுப்­பு­ட­னேயே தொடங்­கப்­பட்­டன என்று கொழும்பு துறை­முக நகரச் செயற்­றிட்டப் பணிப்­பாளர் நிஹால் பெர்­னாண்டோ கூறினார்.

"துறை­முக நக­ரத்தின் சமூ­கப்­பொ­றுப்புப் பணிகள் அந்த நக­ரத்தை பயன்­ப­டுத்­து­கின்ற மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மா­ன­தாக மட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. நக­ரத்­துக்கு வெளியே வாழ்­கின்ற மக்­க­ளுக்கும் பயன்­த­ரக்­கூ­டி­ய­தாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. அந்தவகை­யான திட்­டங்கள் இலங்கை பூராவும் வாழ்­கின்ற மக்கள் சக­ல­ருக்கும் பயன்­தரும்" என்று பெர்­னாண்டோ குறிப்­பிட்டார்.

துறை­முக நக­ரத்­திட்­டத்­தினால் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கங்கள் மற்றும் விளை­ப­யன்கள் பற்­றிய மதிப்­பீ­டுகள் உள்­நாட்டுச் சட்­டங்­களின் கீழ் மேற்­கொள்­ளப்­பட்டு, கரை­யோர இயற்கைப் பாது­காப்பு திணைக்­களம் மற்றும் மத்­திய சுற்­றாடல் பாது­காப்பு அதி­கா­ர­ச­பை­யினால் வலி­யு­றுத்­தப்­பட்ட 72 நிபந்­த­னை­க­ளுடன் அத்­திட்டம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது என்று பெர்­னாண்டோ குறிப்­பிட்டார்.

தலை­நகர் கொழும்­பிற்கு வடக்கே 37 கிலோ­ மீற்றர் தொலைவிலுள்ள கரையோர நக­ரான நீர்­கொ­ழும்பில் மீன­வர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு கொழும்பு துறை­முக நக­ரத்­திட்டம் இலங்கை அர­சாங்­கத்­து­டனும் அர­சாங்க சார்­பற்ற தன்­னார்வ நிறு­வ­னங்கள் பல­வற்­று­டனும் சேர்ந்து 3.03 மில்­லியன் டொலர்கள் மீன­வர்கள் வாழ்­வா­தா­ர­ மேம்­பாட்டுச் செயற்­றிட்­ட­மொன்றை அமைத்­தி­ருக்­கி­றது என்­பதை சமூ­கப்­பொ­றுப்பு அறிக் ­கையிலிருந்து அறி­யக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

அந்த செயற்றிட்­டத்தின் கீழ், கடற்­கரை­ களை புதுப்­பிப்­பதன் மூலமும் அலை­தாங்கி அரண்­களை நிர்­மா­ணிப்­பதன் மூல மும் கடலரிப்பைத் தடுப்பதற்கு 1.65 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டது.நீர்கொழும்பு கடலேரியிலுள்ள மீன் வளர்ப்பு பரப்புகளை பாதுகாப்பதற்கும் நட  வடிக்கைகள் எடுக்கப்பட்டன.

2019 ஒக்டோபர் அளவில் கொழும்பு துறைமுக நகரம் பயிற்சித்திட்டங்களுக்காக 200,000 டொலர்களை ஒதுக்கீடு செய்தது. 2018 ஆம் ஆண்டில் வேலைத்தல பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டது. அத்துடன் 2019 ஆகஸ்ட் அளவில் எந்தவொரு விபத்தும் இல்லாமல் கொழும்பு துறைமுக நகரத்தை நிர்மாணிக்கும் பணிகளில் மொத்தம் 12 மில்லியன் பாதுகாப்பான வேலை மணித்தி யாலங்கள் (safe work hours) செலவிடப் பட்டுள்ளன.

கொழும்பு, (சின்­ஹுவா)