சர்ச்சைக்குரிய வெள்ளைவேன் கடத்தல் விவாகாரம் தொடர்பான ஊடகவியலார் சந்திப்பு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்னவை எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வழங்கிய  பிணையை ஆட்சேபித்து சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் மீள் திருத்தல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணையானது இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையிலேயே ராஜித்த சேனாரத்னவை எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவிட்ப்பட்டுள்ளது.

வெள்ளை வேன் விவகாரம் குறித்த  ஊடகவியலஆளர் சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தினவை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன  கடந்த 2019 டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி  அனுமதித்தமையும் குறிப்பிடத்தக்கது.