(ஆர்.யசி)
அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆம் திருத்­தத்தின் மூலம் நாம் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்த  ஜன­நா­ய­கத்தை தகர்த்­தெ­றிந்து மீண்டும் சர்­வா­தி­கார குடும்ப ஆட்­சியை உரு­வாக்க அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது.  எனவே  ஜன­நா­ய­கத்தை மீண்டும் நிலை­நாட்ட சகல முற்­போக்கு சக்­தி­களும் எம்­முடன் இணைய வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்­துள்ளார்.


ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் விடுத்­துள்ள விசேட அறி­விப்பில் இந்தக் கார­ணி­களை அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
’இதில் அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­னது,


"அர­சியல் அமைப்பின் 19 ஆம் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் மூல­மாக ஜன­நா­ய­கத்தை உரு­வாக்கி மக்­களின் உரி­மை­களை பாது­காத்­துக்­கொள்ள எம்மால் முடிந்­தது. ஆனால் தற்­போ­தைய அர­சாங்கம் 19 ஆம் திருத்த சட்­டத்தை நீக்­கவும், சுயா­தீன அணைக்­கு­ழுக்­களை நீக்­க­வுமே முயற்­சித்­துக்­கொண்­டுள்­ளது.
சுதந்­தி­ர­மான, அமை­தியும் ஜன­நா­ய­கமும் கொண்ட சூழலை உரு­வாக்­கு­வதை விடுத்து மீண்டும் சர்­வா­தி­கார குடும்ப ஆட்சி ஒன்­றினை உரு­வாக்க வேண்டும் என்ற நோக்­கமே இவர்­க­ளிடம் உள்­ளது. இது மக்கள் பெற்­றுக்­கொண்ட ஜன­நா­ய­கத்தை மீண்டும் அவர்­க­ளிடம் இருந்து பறிக்கும் செயற்­பா­டாகும்.


ஜன­நா­யக தூண்­களை தகர்த்­தெ­றியும் இந்த அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை தடுத்து வெற்­றி­கொண்ட சுதந்­தி­ரத்தை தக்­க­வைத்­துக்­கொள்­வது இந்த நாட்டின் சகல மக்களின் கடமையாகும். ஆகவே இந்த மோசமான செயற்பாடுகளில் இருந்து நாட்டினை பாதுகாத்துக்கொள்ள அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.