(இரா­ஜ­துரை ஹஷான்)

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் தொலை­நோக்கு கொள்­கை­யைத் தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்­வ­தற்கு  வியத்­மக அமைப்பின் துறைசார்  நிபு­ணர்கள் பலர்  எதிர்வரும் பொதுத்­தேர்­தலில் போட்­டி­யிடத் தீர்­மா­னித்­துள்­ளனர். ஆனால் எக்­கட்­சியில் போட்­டி­யி­டு­வது என்­பது குறித்து  எவ்­வித  உத்­தி­யோ­க­ பூர்வ தீர்­மா­னங்­களும் இது­வ­ரையில் எடுக்­கப்­ப­ட­வில்லை என சிறந்த எதிர்­கா­லத்­துக்­கான நிபு­ணர்கள்(வியத்­மக) அமைப்பின் பணிப்­பாளர் புஞ்­சி­நி­லமே மீகஸ்­வத்த தெரி­வித்தார்.

வியத்­மக அமைப்பின் காரி­யா­ல­யத்தில் நேற்றுத் திங்­கட்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில்,  

வியத்­மக அமைப்பின் உறுப்­பி­னர்கள் எவரும் அர­சி­யல்­வா­தி­களின் தேவை­க­ளுக்­காகச் செயற்­ப­ட­வில்லை. மாறாக நாட்­டுக்­கா­கவே செயற்­ப­டு­கின்­றார்கள். ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் அபி­வி­ருத்தித் திட்­டங்கள், பொதுக் கொள்­கைகள் அனைத்தும் பாரம்­ப­ரிய அர­சி­யல்­வா­திகள் பின்­பற்­றிய  நிலையிலிருந்து முற்­றிலும்  மாறுபட்­டுள்­ளன.  பாரம்­ப­ரிய அர­சியல்  செயற்­பா­டு­க­ளினால்  எவ்­வித முன்­னேற்­ற மும் இது­வரை  காலமும் ஏற்­ப­ட­வில்லை.

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் கொள்­கை­களில் எவ்­வித அர­சியல் நோக்­கங்­களும் கிடை­யாது. அர­சி­ய­லுக்கு  அப்பாற் சென்று  நாடு  பொரு­ளா­தார ரீதியில் முன்­னேற்­ற­ம­டைய  வேண்டும் என்ற ஒரே கார­ணத்­துக்­கா­கவே  வியத்­மக அமைப்­பின் கடந்த காலங்­களில் இருந்து அவ­ருக்கு   பாரிய ஒத்­து­ழைப்­பை  வழங்கி  வரு­கிறது.

இன்­றைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தொடர்பில் சமூ­கத்தில் மாறுபட்ட கருத்­துகள், விமர்­ச­னங்கள் தோற்றம் பெற்­றுள்­ளன. தற்­போது  சமூக வலைத்­த­ளங்­களில் முன்­னணி  வகிக்கும்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்­கவின் குரல் பதி­வுகள் அதற்கு சிறந்த எடுத்­துக்­காட்­டாகும்.  

படித்த, அர­சியல் நோக்­க­மற்ற துறைசார் நிபு­ணர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக தெரிவு செய்­யப்­பட வேண்டும் என்­பது பெரும்­பான்மை தரப்­பி­ன­ரது பிர­தான கோரிக்­கை­யாக காணப்­ப­டு­கின்­றது. ஆகவே இடம்பெற­வுள்ள பொதுத்­தேர்­தலில் வியத்­மக அமைப்பின்  உறுப்­பி­னர்கள் பலர் நாடு­த­ழு­விய ரீதியில் போட்­டி­யிடத் தீர்­மா­னித்­துள்­ளார்கள். எந்தக்  கட்­சியில் போட்­டி­யி­டு­வது என்­பது குறித்து இது­வ­ரையில் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன இன்று உள்ளூர் மற்றும் சர்­வ­தேச மட்­டத் தில் நல் அபிப்பிராயத்தைப் பெற்றுள்ளது. பிரதான இரு கட்சிகளைக்  காட்டிலும் முன்னணி வகிக்கின்றது. ஆகவே  இக்கட்சியில் போட்டியிடுவதா அல்லது அச்சந்தர்ப்பத்தில் இதனை விட பிறிதொரு கட்சி  சிறந்தது என்று கருதினால் அக்கட்சி யில் போட்டியிடுவதா என்று இன்னும் தீர்மானிக்கவில்லை என்றார்.