ரஷ்யாவின் டாம்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மரத்தினாலான கட்டித்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.

அத்தோடு இன்று அதிகாலை ஏற்பட்ட இத் தீயில் சிக்கி இதுவரை 11 வரையில் உயிரிழந்துள்ளாக அந்நாட்டு அவசரகால அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் சிலர் வெளிநாட்டவர்களாக இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரவித்துள்ளதோடு , தொடர்ந்தும் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.