இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் கவுர் நகரில் ஆற்றின் நடுவே புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்ததில்  9 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

குறித்த பாலம் இடிந்துவிழும்போது அதில் மாணவர்கள் உட்பட 30 க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் பெய்துவரும் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்த நிலையில் பாலம் இடிந்து  விழுந்தவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் பலர் மீட்கப்பட்ட நிலையில், 9 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் மாயமனார்.

இந்தோனேசிய தலைநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றமையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இந்த மாதத்தில் மட்டும் அங்கு 67 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.