விஜ­யகலா மகேஸ்­வரன் ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாழ்.மாவட்ட அமைப்­பா­ள­ரா­கவும் அக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் தற்­போதும் இருக்­கின்றார். ஆகவே அவர் எங்­க­ளது கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இணைந்து கொள் ளப் போவது தொடர்­பிலோ அல்­லது எதிர்­வரும் தேர்­தலில் எங்­க­ளுடன் இணைந்து போட்­டி­யிடப் போவ­தா­கவோ பேசவில்லை என்று கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கூட்­ட­மைப்­புடன் இணைந்து போட்­டி­யி­ட­வுள்­ள­தா­கவும் அது குறித்து சுமந்­தி­ர­னுடன் பேசி­ய­தா­கவும் இணையத் தளங்­களில் செய்­திகள் வெளியா­கி­யி­ருந்­தன. இது­கு­றித்து கேள்வி எழுப்­பிய போதே சுமந்­திரன் எம்.பி. மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது­கு­றித்து அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

எம்­முடன் இணைந்து கொள்­வது தொடர்பில் எங்­க­ளுடன் எந்தவிதமான பேச்­சு­வார்த்­தை­க­ளையும் விஜ­ய­கலா மகேஸ்­வரன் எம்.பி. முன்­னெ­டுக்­க­வில்லை. ஆகை­யினால் எங்­க­ளது கட்­சியில் இணைந்து நடை­பெ­ற­வி­ருக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அவர் போட்­டி­யிடப் போவ­தாகச் சொல்­லப்­ப­டு­கின்ற செய்­தி­களில் எந்­த­வித உண்­மை­களும் இல்லை.

மேலும் அவ்­வாறு எங்­க­ளு­டைய கட்­சியில் இணைந்துகொள்­வது தொடர்­பான எந்­த­வித தீர்­மா­னங்­களும் தன்­னிடம் இல்லை என்று அவரும் ஓர் அறிக்­கையை அண்­மையில் வெளி­யிட்­டி­ருக்­கின்றார். ஆகையினால் தான் எனக்குத் தெரியத்தக்கதாக எங்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளையும் அவர் நடத்தவில்லை என்பதை நான் தெரி வித்துக்கொள்கிறேன் என்றார்.