முதலாம் தரத்திற்கான வகுப்பறையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

முதலாம் தர வகுப்பறையில் 35 மாணவர்கள் மாத்திரம் கல்வி கற்கமுடியுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

நீதிமன்றத்தின் குறித்த தீர்மானத்தை மீளாய்வுக்கு உட்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரிப்பதற்கு உயர்நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பான யோசனைக்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது. 

இதேவேளை ஆரம்ப வகுப்பிற்கென ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன் ஊடாக வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியர் இதுவரை எதிர்கொண்ட அழுத்தங்கள் மற்றும் முகாமைத்துவ பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமெனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.