(தி.சோபிதன்)

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்புக்கு ஒரு புதிய தலைவர் வரு­வ­தாக இல்லை. அதற்­கான சூழ்­நிலை உரு­வா­கவும்  இல்லை எனத் தெரி­வித்­துள்ள அக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன், தலைமை மாற்றம் குறித்து வெளி­வரும் செய்­தி­க­ளையும் அடி­யோடு நிரா­க­ரித்­துள்­ள­துடன் தலைமை மாற்றம் என விச­மத்­த­ன­மான பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் சுட்டிக்காட்டினார்.

இவ்­வி­டயம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கூட்­ட­மைப்பின் தலைமைப் பத­வியில் மாற்றம் என்றோ அல்­லது அதனை நான் எடுக்கப் போவ­தா­கவோ வெளி­வந்த செய்­தி­களில் எந்­த­வி­த­மான உண்­மை­யு­மில்லை. கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் ஐயா தான். அவர் தான் இன்­றைக்கும் தலை­வ­ராக இருக்­கின்றார். மேலும் அவர் தலைவர் பொறுப்பில் இருந்து தான் இறங்­கு­வ­தா­கவோ அல்­லது அந்தத் தலைமைப் பொறுப்பில் இனி நீடிக்கப் போற­தில்லை என்றோ எந்­த­வி­த­மான அறி­வித்­த­லையும் விடுக்­க­வில்லை.

ஆகை­யினால் இந்த தலைமை மாற்றம் என்­கின்ற செய்தி வேண்­டு­மென்றே விச­மத்­த­ன­மாகப் பரப்­பப்­ப­டு­கின்ற ஒரு பிர­சாரம். அவ்­வா­றான தலைமை மாற்றம் மேற்­கொள்­கின்ற அப்­படி ஏதும் முயற்­சிகள் நடக்­க­வில்லை. எந்­த­வி­த­மான மாற்­றமும் இப்­போ­தைக்கு நடை­பெறப் போவதும் இல்லை.

மேலும் கூட்­ட­மைப்பில் ஒரு புதிய தலைவர் வரு­வ­தா­கவே இல்லை. அதற்­கான ஒரு சூழ்­நிலை உரு­வா­கவும் இல்லை. அப்­ப­டி­யான நேரத்தில் அதை ஒரு பெரிய பேசு பொரு­ளாக எடுத்து அதைப்­பற்றி தங்­கட கருத்­துக்­களை சொல்­வ­தெல்லாம் வேண்­டு­மென்று ஒரு விச­மத்­த­ன­மாக செய்­யப்­ப­டு­கின்ற பிர­சா­ர­மாகும்.

அடுத்­த­தாக கூட்­ட­மைப்­பிற்குள் ஒரு தலைமைப் பதவி மாற்றம் ஏற்­ப­டு­வ­தாக இருந்தால் கூட அது கூட்­ட­மைப்பின் உள்­வி­வ­காரம். மற்றக் கட்­சி­க­ளுக்கு அதில் எந்­த­வி­த­மான ஈடு­பா­டு­களும் இருக்க வேண்­டிய அவ­சியம் இல்லை.

குறிப்­பாக சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரனின் ஈபி­ஆர்­எல்எப் அமைப்­பிற்கு யார் தலை­வ­ராக இருக்க வேண்­டு­மென்று நாங்கள் யாரும் எந்தக் காலத்­திலும் கருத்துச் சொல்­வது கிடை­யாது. அதே­போல தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணிக்கு தலைவர் யாராக இருக்க வேண்­டு­மென்றும் நாங்கள் ஒரு காலமும் சொல்­வ­தில்லை.

ஏனெனில் அது அவர்­க­ளு­டைய கட்சி விவ­காரம். ஆகை­யி­னாலே கூட்­ட­மைப்­பிற்குள் இல்­லா­த­வர்கள் கூட்­ட­மைப்பின் தலை­வ­ராக யார் வர வேண்டும் யார் வரக் கூடாது என்று சொல்­வ­தெல்லாம் வேடிக்­கை­யான விட­யங்கள். அது அவர்­க­ளோடு எந்தவிதத்திலுமே சம்மந்தமில்லாத விடயங்களாகத் தான் இருக்கின்றன.

இதேவேளை தலைமைப் பதவியை தருவதற்கான அல்லது தலைமைப் பதவியை நாங்கள் ஏற்றுக்கொள்வதற்கான சூழ்நிலை உருவாகவில்லை. ஆனபடியினால் இப்போது இதற்கான கேள்வி எழவேண்டிய அவசியமும் இல்லை.