காத்தான்குடி பொலிஸ் நிருவாகப் பிரிவிலடங்கும் கிரான்குளம் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை 19 வயதுடைய யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான்குளம் மத்தி பகுதியைச் சேர்ந்த குறித்த இளம்பெண்ணின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக  ஆரையம்பதி மாவட்ட  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகயில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

கிரான்குளம் மத்தி பகுதியைச் சேர்ந்த யோகேந்திரராஜா சாருணியா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.