மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதி பகுதியில் வசிக்கும் மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பஸ்களுக்காக காத்துக்கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதி பகுதியில் வசிக்கும் மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளுக்காக சுமார் 20 கிலோ மீட்டர் வரை சென்று தங்களது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு திரும்பி வருகின்றனர்.

பதுளை வீதியில் புல்லுமலை  தொடக்கம் கரடியனாறு வரையுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கு கரடியணாறு பாடசாலைக்கு  வந்து செல்கின்றனர்.

பாடசாலை கல்வி நடவடிக்கை முடிவடைந்த பின் தங்களது வீடுகளுக்கு செல்வதற்கு பல மணிநேரம் பஸ்களுக்காக காத்திருக்க வேண்டி உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர் .

பாடசலை 1.30 மணிக்கு முடிவடைந்ததும் குறித்நேரத்துக்கு அந்த வழியாக செல்லும் அரச பஸ்கள் மட்டக்களப்பிலிருந்து பதுளை நோக்கி செல்கின்ற போதிலும் குறித்த பஸ் மாணவர்களை ஏற்றுவதில்லை எனவும்  குற்றம் சுமத்தியுள்ளனர் .

ஆனால் அரச பஸ்கள் பாடசாலை மாணவர்களை ஏற்றுவததற்க்கான சீசன் பற்று சிட்டுக்களை வழங்கியுள்ள மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை அவர்களுக்கான பஸ் ஒன்றை சேவையில் அமர்த்த தவறியுள்ளது. 

இதனால் மாணவர்கள்  பல மணிநேரம்  காத்திருக்க வேண்டியுள்ளதாக கவலை தெவித்துள்ளனர். 

குறித்த நேரத்துக்கு தனியார் பஸ் சேவையில் ஈடுபடுவதற்கு முயற்சிகள் மேற்க்கொண்ட போதிலும் அரச மற்றும் தனியார் பஸ்களுக்கிடையே மோதல்  சம்பவங்களும் இடம் பெற்றதாக புகார் தெரிவித்துள்ளனர்.

புதிய ஜனாதிபதி அவர்கள் பதவி ஏற்று பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் அரச பஸ் சாரதி நடத்துனர்கள்  மாணவர்கள் ஏற்றாது செல்வதும் மாணவர்களுக்காக பஸ் சேவையை மேற்கொள்ளாது இருப்பதும்  மிகவும் மன வேதனை அளிப்பதுடன் பின்தங்கிய பிரதேசமான குறித்த பகுதியில் வாழும் மக்களுக்கு புதிய ஜனாதிபதி அவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.