யாழ். குடாநாட்டுக்கு இரணைமடு குளத்திலிருந்து நீரைக் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடும் எண்ணமில்லையென  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தலைவரும்  நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் உறுதியாகத் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று  ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா 23 இன் கீழ் இரண்டில் யாழ். மாவட்ட குடிநீர்ப் பிரச்சினை இரணைமடு கு ள நீரை யாழ். குடாநாட்டுக்கு கொண்டு செல்வதில் காணப்படும் பிரச்சினைகள், பூநகரி குளங்களை ஒருங்கிணைத்தல், கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் ஆகியன தொடர்பாக விசேட கூற்றை முன்வைத்திருந்தார். அதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.