சமூக ஊடகங்களினூடாக இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக மூன்று இலங்கையர்களுக்கு 500,000 திர்ஹமை (இலங்கை நாணய மதிப்பில் 2,46,70,805 ரூபா) அபராதமாக விதித்துள்ளது.

குறித்த மூன்று இலங்கையர்களும் டுபாயில் உள்ள ஐந்து நட்சத்தர ஹோட்டலொன்றில் காவலாளிகளாக தொழில் புரிபவர்கள் ஆவர்.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் அபராதத் தொகையினை செலுத்திய பின்னர் நாடு கடத்தப்படுவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்க எதிரான குறித்த வழக்கானது கடந்த டுபாயின் அல்பர்ஷா பொலிஸ் நிலயைத்தால் தொடரப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே இதன் விசாரணைகளையடுத்து நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை அறிவித்தது. குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட குற்றவாளிகள், நீதி மன்றின் தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.