கிண்ணியா பிரதேச செயலகத்தின், கிராம உத்தியோகஸ்தர்  நலன்காக்கும் சங்கத்தின் ஏற்பாட்டில்  கிண்ணியா பிரதேச செயலகத்தில் நாளை காலை7.30 மணி தொடக்கம்  2.30  இரத்ததான நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

கிண்ணியா பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகஸ்தர் நலன்காக்கும் சங்கத்தினர் ஏற்பாட்டில்  கிண்ணியா தள வைத்தியசாலையின் பங்களிப்புடன்  இரத்ததான நிகழ்வு நடைபெறவுள்ளது. 


இரத்ததான முகாமில் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும்  கலந்து கொண்டு இரத்ததானம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். 

“உதிரம் கொடுத்து, உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில், இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், ஒவ்வொரு வருடமும் இதே தினத்தில் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவதாகச்  சங்கத்தின் தலைவர் தெரிவித்தார் .