நாட்டில் நீடித்து உழைக்கின்ற நுகர்வோர் சாதனங்களின் விற்பனையில் முன்னணியில் திகழ்ந்து வருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி இலங்கை அரசாங்கமானது பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனிகளை வாங்க வட்டியற்ற கடன்களை வழங்கும் திட்டத்தின் கீழ் நாடெங்கிலுமுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிகணினிகளை வழங்குவதற்கு கல்வியமைச்சுடன் கைகோர்த்துள்ளது. 

அரசாங்கம் முன்வைத்த 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு அமைவாக, உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, நிதி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கீழ்ப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இச்செயற்திட்டம் அமுலாக்கம் செய்யப்படுகின்றது.

இந்த பங்குடமையினூடாக உயர் கல்வி அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகிய இரு பெரும் வங்கிகளின் மூலமாக வட்டியற்ற விசேட கடன் திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு DELL மற்றும் Singer X-Series மடிகணனிகளை சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் வழங்கவுள்ளது. 

நவீன Intel 6th Generation i3 மற்றும் i5 Processors கொண்ட உயர் தொழிற்படுதிறனுடனான மடிகணினிகள் உட்பட பல்வேறு வகையான மடிகணினிகளைத் தெரிவுசெய்யும் வாய்ப்பை மாணவர்கள் கொண்டுள்ளதுடன் இந்த மடிகணினிகள் அனைத்தும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அசல் Windows 10 operating system ஆகியவற்றையும் கொண்டுள்ளன.

சிங்கர் நிறுவனத்திடமிருந்து மடிகணினி ஒன்றை வாங்க விரும்புகின்ற எந்தவொரு மாணவரும் நாடளாவியரீதியில் உள்ள எந்தவொரு பல்கலைக்கழத்திற்கும் அருகாமையிலுள்ள எமது கிளைகளில் அவற்றை சௌகரியமாகப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. DELL மற்றும் Singer X-Series மடிகணினிகளை மாணவர்கள் தெரிவுசெய்ய முடிவதுடன் அவற்றிற்கு 3 வருட நம்பிக்கையுடனான உத்தரவாதமும் நாடெங்கிலுமுள்ள எமது சேவை வலையமைப்பின் மூலமான விற்பனைக்குப் பின்னரான பேணற் சேவைகளும் கிடைக்கப் பெறுகின்றன.

இந்த பங்குடமை தொடர்பில் சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

“தற்போது தொழில்நுட்பமானது கல்வியில் மிக முக்கிய பங்கு வகித்து வருவதுடன் எதிர்வரும் காலங்களில் இது இன்னமும் அதிகரிக்கும். இலங்கையில் கல்விக்கு உதவுவதில் சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் எப்போதுமே மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டுள்ளதுடன் உயர் கல்வி அமைச்சுடன் கைகோர்க்கும் வாய்ப்பு எமக்கு வழங்கப்பட்டுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமை அடைந்துள்ளோம். பல்கலைக்கழக மாணவர்கள் இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி எமது நவீன DELL மற்றும் Singer X-Series மடிகணினிகளை தமது கல்வித் தேவைகளுக்காக கொள்வனவு செய்து பயனடைவர் என்று உறுதியாக நம்புகின்றேன்.”

அண்மையில் மைக்ரோசொப்ட் நிறுவனத்திடமிருந்து அதன் பிரதிநிதித்துவ அந்தஸ்தை சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் பெற்றிருந்தது.

பிரதிநிதித்துவ நிறுவனம் என்ற வகையில் மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் மிகப் பாரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்குகின்ற பல்வேறு நன்மைகளை அவர்களுக்கு வழங்குவதற்காக அவற்றுடன் கைகோர்த்துள்ளது. இந்த மூலோபாய வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலமாக இந்த உடன்படிக்கையின் கீழ் மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுகின்ற உலகின் மிகச் சிறந்த வர்த்தகநாமங்களுடன் சிங்கர் இணைந்துள்ளது. 

மைக்ரோசொப்ட் பங்காளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற அதிசிறந்த நடைமுறைகளை தான் கொண்டுள்ளதை சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் இதன் மூலமாக நிரூயஅp;பித்துள்ளமை மற்றுமொரு சாதனை இலக்காக அமையப்பெற்றுள்ளதுடன் வர்த்தகநாமத்தின் சர்வதேச அடைவை இது மேலும் மேம்படுத்தும்.

நாடெங்கிலும் உள்ள 400 இற்கும் மேற்பட்ட காட்சியறைகள் மற்றும் அதற்கு ஈடான விற்பனைக்குப் பின்னரான பேணற் சேவை வலையமைப்புடன் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை சிங்கர் வழங்குகின்றது. கல்வி, விளையாட்டு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சூழல் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துகின்ற ஏனைய சமூக செயற்பாடுகள் என பல்வேறுபட்ட வழிகளில் இலங்கை மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் பல இலட்சக் கணக்கானவர்களின் அன்றாட வாழ்வுடன் இணைந்துள்ள வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் சிங்கர் தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றது.

இத்தகைய முயற்சிகளுக்காக நிறுவனம் பல்வேறு விருதுகளை வென்றுள்ளதுடன் இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல தொடர்ந்து பத்து ஆண்டுகளாக நாட்டில் முதல் ஸ்தானத்திலுள்ள மக்களின் அபிமானத்திற்குரிய வர்த்தகநாமமாகவும் திகழ்ந்து வருகின்றது.