(எம்.எப்.எம்.பஸீர்)

 மேன்முறையீட்டு நீதிமன்றின்  பதில் தலைமை நீதிபதியாக, அந்த நீதிமன்றின் நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

 மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாகச் செயற்பட்ட யசந்த கோதாகொட, கடந்த வாரம் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவி உயர்த்தப்பட்டார். இந்த நிலையிலேயே ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நீதிபதி நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 அண்மையில் உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தன திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். அவரது இடத்துக்கே யசந்த கோதகொட நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 நீதிபதி  நவாஸ் மேன்முறையீட்டு நீதிமன்றில் உள்ள சிரேஷ்ட நீதிபதியாவார். இந்த நிலையிலேயே அவரை பதில் தலைமை நீதிபதியாக ஜனாதிபதி நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.