கொபைகனை - ஹென்கமுவ பிரதேசத்தில் உள்ள பாரியளவிலான  கோழி பண்ணையின் காவலாளி நாய்களை கொலை செய்தமை குறித்து வழக்கில் சந்தேக நபருக்கு பெப்ரவரி 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க  நிகரவெடிய நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

குறித்த வழக்கானது எவ்விதமான முறைப்பாடுமற்ற நிலையில், அண்மையில் சமூக வலைத்தளங்களில் குறித்த காவலாளி நாய்களை சித்திரவதை செய்து கொலை செய்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. 

இதன் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே  சந்தேகநபரை கைது செய்து பொலிசார் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். 

நிகவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி உபுல் சந்தன அபேசிங்க அறிவுறுத்தலின் பேரில் உதவி பொலிஸ் அதிகாரி எல்.அமரக்கோனின் உள்ளிட்டவர்கள் சம்பவம் தொடர்பில் மேற்பார்வையில்,  பொலிஸ் நிலைய அதிகாரி பண்டார ஜயதிலகவின் குழுவால் விசாரணை நடாத்தப்பட்டது.