கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் பகிடிவதை தொடர்பில் இரண்டாம் வருட மாணவர்கள் தாக்கியதில் முதலாம் வருட மாணவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர் .
குறித்த பல்கலைகழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்கள் வன்முறையற்ற மாணவர் அமைப்பு என பகிடிவதையை இல்லாது ஒழிக்கும் ஒர் அமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவதினமான இன்று திங்கட்கிழமை (20) பகல் வன்முறையற்ற மாணவர் அமைப்பை ஆரம்பித்த முதவாம் ஆண்டு மாணவர் இருவர் மீது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கொண்ட குழுவினர் யாரை கேட்டு இந்த அமைப்பை உருவாக்கியது என தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் முதலாம் ஆண்டு மாணவர்கள் இருவர் படுகாயமடைந்தனர் இவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக சென்ற அம்புயூலன்ஸ் வண்டியை பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்நுழைய விடாமல் மாணவர்கள் தடுத்துள்ளனர்.
இதன் பின்னர் பல்கலைக்கழக பின்வழியால் அம்புயூலனஸ் சென்று படுகாயடைந்த இருவரையும் ஏற்றிக் கொண்டு வளாகத்தை விட்டு வெளியேற விடாமல் தாக்குதல் மேற்கொண்ட மாணவர்கள் தடுத்துள்ளதாகவும் அதன்பின்னர் காயப்பட்ட இரு மாணவர்களையும் அம்புயூலனஸ் வண்டியில் எடுத்து கொண்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பல்கலைக்கழகவளாகத்தில் சிலமணிநேரம் பதற்ற நிலமை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM