அம்பலாங்கொட, மீட்டியாகொட  கலகொட பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றின் கூரை உடைந்து வீழ்ந்ததில் 10 மாணவர்கள் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (20) பிற்பகல் 2.30 மணியவில் இடம்பெற்றுள்ளது. தனியார் மேலதிக வகுப்பு இடம்பெறும் கட்டடமொன்றின் கூரையே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த மாணவர்களின் உடல்நிலை குறித்து கவலையடைய தேவையில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடபொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.