திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம்  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதான நீர் குழாய் அவசர திருத்த  வேலை காரணமாக நாளை (21) நீர்வெட்டு  இடம்பெறவுள்ளது

நாளை காலை 8  மணி தொடக்கம் மாலை 8 மணி வரை நீர் வெட்டு இடம்பெறவுள்ளது

மாவட்டத்தின் தம்பலகாமம், கிண்ணியா, குச்சவெளி, திருகோணமலை போன்ற பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பகுதிகளில் நீர்வெட்டு இடம்பெறவுள்ளதாக திருகோணமலை மாவட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முகாமையாளர் தெரிவித்தார்

இதனால் மக்களுக்கு தேவையான நீரினை சேமித்து  வைத்துக் கொள்ளுமாறும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.