(ஆர்.யசி)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கம் ஒன்றினை அமைக்க மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என தகவல் தொலைத்தொடர்புகள் மற்றும் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ள முரண்பாடுகள் இன்னும் தீராத நிலையில் அவர்களின் கைகளுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரம்  செல்லும் என்றால் நாடு மீண்டும் நாசமாகும். ஆகவே மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்ற சரியான தீர்மானத்தை இம்முறையும் எடுக்க வேண்டும். 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சரியான தீர்மானம் ஒன்றினை எடுத்து மாற்றத்தை கொண்டுவந்ததை போலவே சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் இணைந்து பலமான அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.