(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய   விதத்தில் தொலைப்பேசியில் உரையாடியவர்கள் இதுவரையில் ஏன்  விசாரணைகளுக்கு உட்படுத்தவில்லை என சக்திவலு இராஜாங்க அமைச்சர்  ரோஹித அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் ரஞ்சனுடனான குரல் பதிவுகளுடன் தொடர்புடைய நீதிபதிகள், தொடர்பில் பிரதம நீதியரசர்  உரிய  நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும். 

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள்  அரச இரசாயன பகுப்பாய்விற்கு பிறகு உறுதிப்படுத்தப்பட்டதும்   பல குடும்பங்கள்  விவாகரத்துக்கான விண்ணப்பங்களை கோரும்   நிலை ஏற்படும். 

மேலும் பல அரச அதிகாரிகள் பதவி விலக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். அந்த அளவிற்கு குரல் பதிவுகள் அநாகரிகமாவும், வெறுக்கத்தக்க நிலையிலும் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.