நாட்டில் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­ட­தி­லி­ருந்து பல்­வேறு விட­யங்கள்  தொடர்­பாக வாத­ப் பி­ர­தி­வா­தங்கள்  இடம்பெற்று வருகின்றன.   19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம்  புதிய அர­சி­ய­ல­மைப்பு,  வறுமை ஒழிப்பு விடயம்,  ஜெனிவா விவ­காரம், பாரா­ளு­மன்றத் தேர்தல்  உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து  ஆளும் தரப்­பி­னரும்  எதிர்க்­கட்­சி­யி­னரும்  பேசி­வ­ரு­கின்­றனர்.  

அதில் முக்­கி­ய­மாக பாரா­ளு­மன்ற தேர்தல் முறை மாற்றம்  தொடர்­பான  பேச்­சுக்­களே  மீண்டும் அர­சியல் களத்தை ஆக்­கி­ர­மித்­து­ வ­ரு­கின்­றன.   அதா­வது தற்­போ­தைய நடப்பு விகி­தா­சார  தேர்தல் முறை­மையை மாற்­றி­ய­மைக்­க­ வேண்­டி­யது கட்­டாயம்   என்று  ஆளும்  தரப்பு திட்­ட­வட்­ட­மாகக் கூறி­வ­ரு­கின்­றது. இது தொடர்பில் எதிர்க்­கட்­சி­யினர் இன்னும்     தமது நிலைப்­பாட்டைச்   சரி­யாக வெளிப்­ப­டுத்­த­வில்லை. எனினும் அர­சாங்­கத்தில் உள்ள தரப்­பினர்   தற்­போ­தைய  விகி­தா­சார தேர்தல் முறை­மையை  மாற்­றி­ய­மைக்­க­ வேண்டும் என்­பதில் உறு­தி­யான கருத்­துக்­களை வெளியிட்­டு­ வ­ரு­கின்­றனர்.

முக்­கி­ய­மாக  தற்­போ­தைய விகி­தா­சார  தேர்தல் முறை­மையின் ஊடாக  பொதுத்  தேர்­தல்­களில் வெற்­றி­பெ­று­கின்ற எந்தக் கட்­சிக்கும்    பெரும்­பான்மை பலத்­துடன் ஆட்­சி­ ய­மைக்க முடி­யாது என்­பதே அர­சாங்கம் முன் ­வைக்கும் தர்க்­க­மாக இருக்­கின்­றது. எந்­த­வ­கை­யிலும்  பெரும்­பான்­மையை பெற்று ஆட்­சி­ய­மைப்­பது என்­பது இந்த விகி­தா­சார  தேர்தல் முறை­மையில் சாத்­தி­ய­மற்­றது என்­ப­தையே ஆளும் கட்சி முன்வைத்து வ­ரு­கின்­றது.

எனவே   தற்­போ­தைய விகி­தா­சார  தேர்தல் முறை­மையை மாற்­றி­ய­மைக்­க­வேண்டும் என்­பதில் ஆளும்  கட்சி உறு­தி­ யாக இருக்­கின்­றது.  அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள்   ரா­ஜாங்க அமைச்­சர்கள்    பேச்­சா­ளர்கள் மற்றும்  பங்­காளிக் கட்­சிகள் எனப் பலரும்  இவ்­வாறு  தேர்தல் முறை மாற்றம் அவ­சியம் என்­ப­தனை எடுத்­துக்­ கூ­றி­வ­ரு­கின்­றனர்.  

அத­னா­லேயே  அடுத்த  பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தமக்கு  மூன்­றி­ல் இரண்டு பெரும்­பான்மை பலத்தை மக்கள் பெற்­றுத்தர­வேண்டும் என்று  ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ  தலை­மை­யி­லான  அர­சாங்கம்  கோரி­வ­ரு­கின்­றது. காரணம்  தற்­போ­தைய தேர்தல் முறை­மையை மாற்­றி­ய­மைக்க பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­ல் இ­ரண்டு பெரும்­பான்மை பலம் அவ­சியம் என்­பது முக்­கிய விட­ய­மாகும்.  அத­னா­லேயே     அர­சா­ங்கம்    பாரா­ளு­மன்ற தேர்­தலில்  மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்தைக் கோரு­கின்­றது.  

அதா­வது புதிய தேர்தல் முறை­மையை  அறி­மு­கப்­ப­டுத்தும் நோக்­கி­லேயே அர­சாங் கம் தற்­போது அர­சியல் காய்­களை நகர்த்­து­ கின்­றது. அதா­வது தற்­போ­தைய  தக­வல்­களின் பிர­காரம்  அர­சாங்கம் 30 சதவீத விகி­தாசார முறை­மை­யிலும்  70 சதவீத தொகுதி முறை­மை­யிலும் அமைந்த   புதிய  தேர்தல் முறை­மைக்கு செல்­வ­தற்கே  முயற்­சிப்­ப­தாக  தெரி­கின்­றது.  

அதா­வது விகி­தா­சார  தேர்தல் முறை­மை­யி­லி­ருந்து முற்று முழு­தாக வில­கி­வி­டாமல் அதன் பண்­பு­களை 30 சதவீதம் வைத்­துக்­கொண்டு    70 சதவீத தொகுதி  முறை­மை­யூ­டான     புதிய  தேர்தல் முறை­மைக்கு செல்­லவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது.  அத­ன­டிப்­ப­டையில் அர­சாங்கம்  அடுத்த பாரா­ளு­மன்ற  தேர்­தலின்  பின்னர் அர­சி­ய­ல­மைப்பின்  20 ஆவது திருத்­த­மாக  பாரா­ளு­மன்ற தேர்தல் முறை­மையை மாற்­றி புதிய தேர்தல் முறை­மைக்குச் செல்லும் என்று  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  

ஆனால் இதற்கு பாரா­ளு­மன்­றத்தில்  மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலம்  அவ­சி­ய­ம்.  அதே­போன்று    எதிர்க்­கட்­சிகள்  மற்றும்  சிறு­பான்மைச் சிறிய கட்­சிகள் எவ்­வா­றான  பிர­தி­ப­லிப்பை   காட்டும் என்­பதும் முக்­கி­ய­மானது.  

தேர்தல் என்­பது ஒரு நாட்டின்  ஜன­நா­யக கட்­ட­மை­ப்பின் மிக முக்­கி­ய­மான  அம்­ச­ம்.   தேர்தல் ஊடாக  மக்கள்  தமது ஜன­நா­யக உரி­மையை பயன்­ப­டுத்தி  தமது பிர­தி­நி­தி­களை  தம்மை ஆளும் மன்­றங்­க­ளு­க்கு அனுப்­பு­கின்­றனர். தற்­போது நாம்  பிர­தி­ நி­தித்­துவ  ஜன­நா­யக முறை­மையைப்  பின்­பற்­று­கின்றோம்.  

இந்த  பிர­தி­நி­தித்­துவ ஜன­ந­ாயக முறை­மையில்  தேர்தல் பிர­தான பங்கு வகிக்­கின்­றது.   காரணம்  மக்­க­ளாட்சி என்று கூறி­ னாலும் அனைத்து மக்­களாலும்  பாரா­ளு­மன்றம் சென்று  நாட்டை ஆட்சி செய்ய முடி­யாது.  எனவே  மக்கள் தமது பிர­தி­நி­தி­களை பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்­பு­கின்­றனர்.  நாட்டின்  இறைமை, மக்­க­ளி­டமே உள்­ளது. எனவே    மக்கள்  தமது பிர­தி­நி­தி­களைத்  தெரிவு செய்ய தேர்தல் முறை  உகந்­த­தாக இருக்­க­வேண்டும்.

அதுவும்  பல்­லின மக்கள் வாழ்­கின்ற ஒரு நாட்டில்  அந்த அனைத்து  மக்­க­ளி­னதும்  பிர­தி­நி­தித்­ து­வங்கள் உறு­தி­ப் ப­டுத்தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­ம்.  அதற்கு  அவ்­வாறு  பிர­தி­நி­தித்­து­வங்­களைத் தெரிவு  செய்யும்   தேர்தல் முறைமை  ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக அமை­வது கட்­டா­ய­ம்.  அதா­வது எந்­த­வொரு இனத்­துக்கும் சமூ­கத்­துக்கும் அநீதி ஏற்­ப­டாத வகையில்  தேர்தல் முறைமை அமை­வது  முக்­கி­ய­மானது.   அந்த உரிமை  உறு­தி­ப்ப­டுத்­தப்­ப­டு­வது  இன்­றி­யமை­யா­தது.  

அந்­த­வ­கையில் தற்­போது காணப்­ப­டு­கின்ற விகி­தா­சார  தேர்தல் முறை­மை­யா­னது  பல்­லின மக்கள் வாழ்­கின்ற  நாட்­டுக்கு உகந்த    அனைத்து  மக்­களின் பிர­தி­நி­தித்­து­வங்­க­ளையும் உறு­தி­ப்ப­டுத்­து­கின்ற தேர்தல் முறைமை என்று கரு­தப்­ப­டு­கின்­றது.

1978 ஆம் ஆண்டு  கொண்­டு­வ­ரப்­பட்ட  அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக  தற்­போ­தைய விகி­தா­சார  தேர்தல் முறைமை  அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.  அதற்கு முன்னர்  நேர­டி­யாக  தொகுதி முறை­மையே காணப்­பட்­டது.    அதா­வது  இந்­தி­யாவில் உள்­ளதைப் போன்ற முறை­யாக அது இருந்­தது.  அதா­வது ஒரு தொகு­தியில் ஒரு  லட்சம் வாக்­கா­ளர்கள் இருக்­கின்­றார்கள் என்று வைத்­துக்­கொள்வோம்.  ஐந்து கட்­சி­களின் சார்பில் ஐந்து வேட்­பா­ளர்கள் கள­மி­றங்கி அதில்  ஒரு  40000 வாக்­கு­களைப் பெற்று ஏனைய வேட்­பா­ளர்கள் அத­னை­விட குறை­வான வாக்­கு­களைப் பெற்றால்  40000 வாக்­கு­களை பெற்­றவர் வெற்­றி­யாள­ராக அறி­விக்­கப்­ப­டுவார்.  ஏனைய நான்கு வேட்­பா­ளர்கள்  சில­வேளை மொத்­த­மாக  55000  வாக்­கு­களைப் பெற்­றி­ருந்­தாலும் கூடிய வாக்­கு­களைப் பெற்­ற­வரே  வெற்­றி­பெற்­ற­வ­ராக அறி­விக்­கப்­ப­டுவார். இதுவே  தொகுதி  முறை­யி­லமைந்த தேர்தல் முறை­மை­யாகும்.  

ஆனால்   தற்­போது எமது நாட்டில் அமுலில்  இருக்கும் விகி­தா­சார  தேர்தல் முறை­மை­யா­னது  பல்­லின மக்­க­ளுக்குச் சாத

­க­மா­ன­தா­கவும்  எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கும்   அதிக சந்­தர்ப்­பங்­களை கொடுப்­ப­தா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றது.  

விகி­தா­சார  தேர்தல் முறை­மையில்   மாவட்ட ரீதி­யி­லேயே பிர­தி­நி­தித்­து­வங்கள் பார்க்­கப்­படும்.  ஒரு மாவட்­டத்­தி­லி­ருந்து தெரிவு செய்­யப்­படும்  மக்கள் பிர­தி­நி­தி­களின் எண்­ணிக்கை சனத்­தொகை மற்றும் பூகோள அளவு என்ற அள­வு­கோல்­களின்  அடிப்­ப­டையில்  தேர்தல் திணைக்­க­ளத்­தினால் அறி­விக்­கப்­படும்.

 ஒரு மாவட்­டத்தில் ஆளும் கட்சி அனைத்து தொகு­தி­க­ளிலும் வெற்­றி­பெற்­றாலும் கூட   அங்கு போட்­டி­யிட்­டி­ருந்த  ஏனைய கட்­சிகள்  குறைந்த வாக்­கு­களைப் பெற்­றாலும்  மக்கள் பிர­தி­நி­தித்­து­வங்­களை பெறும் சாத்­தியம் உள்­ளது.  சிறிய கட்­சி­க­ளுக்குக் கூட  பிர­தி­நி­தித்­து­வங்­களைப்  பெறு­வ­தற்­கான சாத்­தியம்  விகி­தா­சார  தேர்தல் முறை­மையில் உள்­ளது. ஒரு மாவட்­டத்தில் ஐந்து தொகு­திகள் இருந்தால் ஒரு சிறிய கட்சி அல்­லது சிறு­பான்மை கட்சி ஒவ்­வொரு தொகு­தி­யிலும்  சிறிய எண­்ணிக்­கை­யி­லான  வாக்­கு­களைப் பெற்று  முழு மாவட்­டத்­திலும்  குறி­ப்­பி­டத்­தக்க வாக்­கு­களைப் பெற்றால் ஓர் ஆச­னத்தைப் பெறும் வாய்ப்பு விகி­தா­சார  தேர்தல் முறை­மையில் கிடைக்­கின்­றது.  

ஆனால்  தொகுதி முறை­மையில் ஒரு மாவட்­டத்தில் உள்ள ஐந்து  தொகு­தி­க­ளிலும்   ஒரு கட்சி வெற்­றி­பெற்றால் அக்­கட்­சியே அனைத்து ஆச­னங்­க­ளையும் பெறும்.  அதனால்    விகி­தா­சார  தேர்தல் முறைமை  ஒரு சிறந்த அனைத்து  சமூ­கங்­க­ளுக்­கு­மான  மக்கள் பிர­தி­நி­தித்­து­வங்­களை உறு­தி­ப் ப­டுத்­து­கின்ற ஒரு முறை­மை­யாகப் பார்க்­கப்­ப­டு­கின்­றது.  பல்­லின மக்கள் வாழ்­கின்ற ஒரு நாட்­டுக்கு  இந்த விகி­தா­சார  தேர்தல் முறைமை சிறந்த முறை­யாக அமைந்­துள்­ள­தாக  கரு­தப்­ப­டு­கின்­றது. இந­்நி­லையில் அர­சாங்கம்  தற்­போது முழு­மை­யாக   தொகுதி முறை­மைக்கு செல்­லாமல்  30 வீத விகி­தா­சார    முறைமை  மற்றும்  70 வீத   தொகுதி முறை­மையும் உள்­ள­டங்­கிய புதிய  தேர்தல்  முறை­மைக்குச் செல்­வது குறித்தே ஆராய்­வ­தாகத் தெரி­கின்­றது.

பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் தற் ­போ­தைய  தேர்தல் முறை­மையை மாற்­றி­ய­மைப்­பது  தொடர்பில் இப்போது வெளி வி­வ­கார அமைச்சர்  தினேஷ் குண­வர்த்­தன தலை­மையில்  பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு அமைக்­கப்­பட்டு   ஆரா­யப்­பட்­டது.  அந்தக் குழுவும் இவ்­வாறு  30 சதவீத விகி­தா­சார    முறைமை  மற்றும்  70 சதவீத   தொகுதி முறை­மையும் உள்­ள­டங்­கிய புதிய  தேர்தல்  முறை­மை­யையே பரிந்­துரை செய்­தது.

அதனால் தற்­போது  அந்த   யோச­னையை மீண்டும்  களத்­துக்கு கொண்­டு­வ­ரு­வது குறித்து ஆராய்­வ­தாக  அர­சாங்­கத்தின் பேச்­சாளர்  கேச­ரிக்குத் தெரிவித்தார்.  

அதா­வது இந்த நாட்டில் 1977 ஆம் ஆண்­டுக்குப்  பின்னர்  ஒரே ஒரு தட­வையே ஸ்திர­மான ஓர் அர­சாங்கம் அமைந்­தது. 1989 ஆம் ஆண்டு  கடும் வன்­மு­றை­க­ளுக்கு மத்­தியில் ஸ்திர­மான ஒரு பாரா­ளு­மன்றம் அமைந்­தது. அதன் பின்னர்   பெரும்­பான்மை பல­முள்ள பாரா­ளு­மன்றம் அமை­ய­வே­யில்லை.  இதற்கு என்ன காரணம் என்று நாம் ஆரா­ய­ வேண்டும். ஒரு தேர்­தலில்  வெற்­றி­பெ­று­கின்ற கட்­சி­யினால் ஆட்சி அமைக்க பெரும்­பான்மை பலம் கிடைக்­கா­விடின் அங்கு குறை­பாடு இருக்­கின்­றது என்­பது தெளி­வா­கின்­றது. எனவே நாம் முதலில் இந்த நாட்டில் தேர்தல் முறை­மையை மாற்­றி­ய­மைக்­க­வேண்­டி­யது  கட்­டா­ய­மாகிறது.  எனவே நாட்டில் ஸ்திர­மான அர­சாங்கம் அமைக்­க­வேண்­டு­மானால் 30 சதவீத விகி­தா­சார மற்றும் 70 சதவீத தொகுதி முறையில் அமைந்த  தேர்தல் முறைக்கு  கட்­டாயம் செல்­ல­வேண்டும். இல்­லா­விடின்  எந்­த­வொரு செல்­வாக்­கான கட்­சிக்கும்  ஸ்திர­மான  அர­சாங்­கத்தை அமைப்­பது கடி­ன­மா­கி­விடும்.  அதனால்  தேர்தல் முறை­மையை மாற்­றி­ய­மைக்­க­வேண்டும்.  70 சதவீத தொகுதி முறைமை இருந்தால் நிச்­ச­ய­மாக  வெற்­றி­பெறும் கட்­சியால் ஸ்திர­மான  அர­சாங் ­கத்தை அமைக்க முடியும்  என்றும்  அர­சாங்­கத்தின் பேச்­சாளர்  ரம்­புக்­வெல குறிப்­பிட்­டி­ருந்தார்.

தற்­போ­தைய விகி­தா­சார தேர்தல் முறைமை  மாற்­றி­ய­மைக்­க­ வே­ண்டும் என்ற கோரிக்கை நீண்­ட­கா­ல­மாக இருந்­து­வ­ரு­கின்­றது.  குறிப்­பாக  இதில் காணப்­படும் விருப்பு வாக்கு முறைமை   கட்­சிக்குள்ளேயே  முரண்­பா­டு­க­ளையும்  வன்­மு­றை­க­ளையும் ஏற்­ப­டுத்­து­வதால் இதனை மாற்­ற­வேண்டும் என்ற கோரிக்கை   முன்­வைக்­கப்­பட்­டு­ வ­ரு­கின்­றது.  

விருப்பு வாக்கு முறை­மை மாற்­றி­ய­மைத்து  தேர்தல் முறை­மையை  மாற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வதை  யாரும் விமர்­சிக்க முடி­யாது.   ஆனால் புதி­தாக கொண்­டு­வ­ரப்­படும் எந்­த­வொரு தேர்தல் முறை­மையும்   சிறு­பான்மை மக்­களின்   பிர­தி­நி­தித்­து­வங்­களைப் பாதிக்­கா­த­வாறு  பார்த்­துக் ­கொள்­ள­வேண்டும்.  அதே­போன்று  எதிர்க்­கட்­சிக்­கான இடை­வெ­ளியும்  அவ­  சி­ய­ம்.   அப்­போ­துதான் ஜன­நா­யகம்  உறு­தி­ப் ப­டுத்­தப்­படும்.  நாடு முன்­னே­று­வ­தற்கும்   சவால்­களை எதிர்­கொள்­ளவும் ஸ்திர­மான அர­சாங்கம் அவ­சியம் என்­ப­தை எவரும் மறுக்க முடி­யாது.   பல்­வேறு  புதிய  சவால்கள்  வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. அவற்றைக் கையாள ஸ்திர­மான அர­சாங்கம்  அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்ற கருத்து  முன்­வைக்­கப் ­ப­டு­கின்­றது.

ஆனால் அதற்­காக   சிறு­பான்மை மக்­களின் பிர­தி­நி­தித்­து­வங்­களை பாதிக்கும் வகையில் எந்த ஏற்­பாட்­டையும் முன் ­னெ­டுக்­கக்­கூ­டாது.  பல்­லின மக்கள்  வாழும் இந்த நாட்டில் பன்­முகத் தன்மை பாது­காக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­ம். எனவே   தேர்தல் முறை­மையை மாற்­று­வ­தாயின்  அர­சா­ங்கம் அனைத்து கட்­சி­க­ளு­டனும்  

பேச்­சு­வார்த்தை நடத்­த­வேண்டும்.  இது  தொடர்பில் பொது­வான இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட வேண்டி யது அவ­சி­ய­ம்.

தேர்தல் முறைமை மாற்­றப்­பட்டால்  அதற்கு ஏற்­ற­வாறு புதிய எல்லை நிர்­ண­யங்­களும்  இடம்­பெறும்.  அவற்றின் ஊடா­கவும் யாருக்கும் அநீதி இடம்­பெ­றக்­கூ­டாது. எனவே இந்த விட­யத்­தில சிறு­பான்மை கட்­சிகள் ஒற்றுமையுடன்  செயற்படுவது   அவசியமாகின்றது.

காரணம்    முழுமையாக தொகுதி முறைமைக்குச் சென்றால்  அது சிறுபான்மை மக்களை பாதிப்பதாக அமையும். எனவே  புதிய தேர்தல் முறைமையானது விகிதாசார தேர்தல் முறைமையின் பண்புகளை உள்ளடக்கவேண்டும்.  இது  தொடர்பில்  சிறுபான்மை கட்சிகள்  விழிப்புடன் இருப்பது அவசியம். இவ்வாறான  கட்டத்தில்  சிறுபான்மை கட்சிகள் அரசியல் வேறுபாடுகளை காரணம் காட்டி பிரிந்து செயற்பட்டால் அது அனைத்து தரப்பினருக்கும் பாதகமான நிலையை உருவாக்கும்.  நாட்டின் தேர்தல் முறைமையை மாற்றியமைக்க பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவை.   இது  தொடர்பில்  சிறுபான்மை அரசியல் கூட்டணி ஒன்றின் தலைவர் குறிப்பிடுகையில்,  

``இவ்வாறு முற்றுமுழுதான  தொகுதி முறைமையில் அமைந்த  தேர்தல் முறைமைக்கு இடமளிக்கமாட்டோம்.  கடந்த ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்திலும்  இவ்வாறு  முயற்சிக்கப்பட்டது. ஆனால் நாங்கள் இடமளிக்கவில்லை`` என்று குறிப்பிட்டார்.  

தேர்தல் என்பது ஜனநாயகக் கட்டமைப்பின்  முக்கிய தூணாக உள்ளது.  அதனூடாகவே  மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து  தம்மை ஆட்சி செய்யும் பாராளுமன்றத்துக்கு அனுப்புகின்றனர். அதனூடாகவே ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படுவதுடன்  மக்களாட்சி  நடத்தப்படுகின்றது.   அதற்கு  தேர்தல் முறைமை  சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பது  அவசியம்.  பல்லின மக்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்துவதாக  இருப்பது  கட்டாயமாகின்றது.

-ரொபட் அன்டனி