எமது முகத்தில் முக்­கிய புலன் உறுப்­புக்­க­ளான கண், காது, மூக்கு, வாய் என்­பன அமைந்­துள்­ளன. வாயின் உட்­பு­ற­மாக உள்ள தொண்டை, காது, மூக்கு என்­பன மிக நெருக்­க­மாக அமைந்­துள்­ளன. ஒன்றில் ஏற்­படும் தொற்று மற்­றைய  உறுப்பை இல­கு­வாக சென்­ற­டையும் வாய்ப்­புள்­ளது. பொது­வாக தொண்டை, மூக்கு என்­ப­வற்றில் ஏற்­படும் தொற்று சில சம­யங்­களில் காதுக்கும் பர­வு­வ­துண்டு. குறிப்­பாக சிறு­வர்­களில் தொண்டைத் தொற்று, மூக்குத் தொற்று என்­ப­வற்றை அடுத்து காதுத் தொற்று, ஏற்­பட்டு காது வலி ஏற்­ப­டு­வதை அறி­வீர்கள். இம்­மூன்று உறுப்­புக்­க­ளுக்கும் நெருங்­கிய தொடர்பு இருப்­பதால் தான் இம்­மூன்­றுக்கும் பொது­வான E.N.T (Ear, Nose, Throat) சிகிச்சைப் பிரிவு, சுகா­தாரப் பிரி­வி­னரால்  ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இம்­மூன்று உறுப்­பு­க­ளுக்கும் பொது­வான வைத்­திய நிபு­ணரும் தனிப்­பி­ரி­வாக பணி­யாற்­று­கிறார். இம்­மூன்று உறுப்­பு­க­ளிலும் ஏற்­படும் தொற்­று­நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் பற்றி நோக்­குவோம்.

முன்­காது தொற்று

காது முன்­காது, நடுக்­காது, உட்­காது என மூன்று பிரி­வாக நோக்­கப்­ப­டு­கின்­றது. வெளிப்­புறக் காதி­லி­ருந்து காது சவ்வு வரை அமைந்­துள்ள பகு­தியை முன்­காது, சவ்­வுக்கு பின்னால் நடுக்­காதும் அதற்குப் பின்னால் உட்­காதும் அமைந்­துள்­ளன. முன் காதில் ஏற்­படும் தொற்­றினால் ஏற்­படும் அரிப்பு அழற்சி என்­ப­வற்றை OTITIS Externa என்­கிறோம். இந்த தொற்று ஏற்­பட்­ட­வர்­க­ளுக்கு காது வலி­யுடன் சில வேளை, காதி­லி­ருந்து சீழ் வடி­தலும் ஏற்­படும். காது  கேட்­பதில் சிர­ம­மாக இருக்கும் திரவம் தடிப்­பா­கவும் பச்சை, மஞ்சள் நிற­மா­கவும் கெட்­ட­வாடை வீசு­வ­தா­கவும் இருக்கும்.

காதுத் தொற்று வெளி­யி­லி­ருந்து அல்­லது தொண்டை, மூக்கு தொற்றை அடுத்து ஏற்­ப­டலாம். பொது­வாக காதுக்கு நாம் எதை­யா­வது இட்டு துடைக்கும் போது தொற்று ஏற்­ப­டலாம். குளிக்கும் போது காதுக்குள் தண்ணீர் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுத்­த­மற்ற  நீர்த் தேக்­கங்கள், நீச்சல் தடா­கங்கள் என்­ப­வற்­றி­லி­ருந்தும் தொற்று ஏற்­படும் சாத்­தியம் உண்டு. காதை அடைத்­த­படி நீந்­தலாம்.

நடுக்­காது தொற்று

நடுக்­காதில் ஏற்­படும் தொற்று காதினுள் அழற்­சியை ஏற்­ப­டுத்­து­கி­றது. இதனால் காது வலி, காது நிரம்­பி­யி­ருக்கும் தன்மை, காது கேட்­பதில் குறை­பாடு, பிரட்டு, சில வேளை வாந்தி என்­ப­னவும்  ஏற்­ப­டலாம்.  நடுக்­காது தொற்றை அடுத்து காது­க்குள் திரவம் தேங்­கு­கி­றது. இதனால் ஒலி அலை­களின் பய­ணிப்பு தடங்­க­லுக்கு  உள்­ளா­கலாம். உரை­யா­டு­வதை தெளி­வாக கேட்­பதில் சிர­ம­மாக இருக்கும். குறிப்­பாக, பின்­ன­ணியில் வேறு சத்­தங்கள்  இருக்கும் போது  இதை தெளி­வாக உண­ரலாம். பிறர் சொல்­வது தெளி­வாக கேட்­கா­மை­யினால் மறு­ப­டியும் கூறும்­படி சொல்­வார்கள். தொலை­பேசி உரை­யா­டல்கள் சிர­ம­மாக இருக்கும். வானொலி தொலைக்­காட்­சி­களை கூடிய சத்­தத்தில் வைத்து கோட்­பார்கள். நடுக்­காது தொற்றைக் குண­மாக்க காலம் எடுக்கும். நீண்ட நாள் உயிரி எதிரி மருந்­து­களை உட்­கொள்­வ­துடன், காதுத் துளி மருந்­து­க­ளையும் பாவிக்க வேண்டி ஏற்­படும். நடுக்­காதுத் தொற்­றுக்கு உள்­ளா­ன­வர்கள் நீச்சல் செய்­வ­தையும் தடா­கங்­களில் குளிப்­ப­தையும் தவிர்க்க வேண்டும். காதை ஒரு­போதும் தாமா­கவே சுத்­தப்­ப­டுத்தக் கூடாது. அதிக நீரா­காரம் அருந்த வேண்டும். தேவைப்­படின் வைத்­திய ஆலோ­ச­னை­யுடன் வலி நிவா­ர­ணி­களை பாவிக்க வேண்டும்.

நடுக்­காது தொற்று, பின்­காது வழி­யாக நரம்பு மண்­ட­லத்­தையும் மூளை­யையும் தாக்­கக்­கூடும். அபூர்­வ­மாக காதுத் தொற்றை அடுத்து மூளைக்­க­வசத் தொற்றும், மூளைத் தொற்று ஏற்­ப­டலாம். இதனால் ஏற்­படும் மூளைக்  கவச காய்ச்சல் மிக ஆபத்­தான நோயாகும். எனவே, நடுக்­காது தொற்றை விரைந்து குணப்­ப­டுத்த வேண்டும்.

காதில் ஏற்­படும் காயங்கள்

காதில் ஏற்­படும் காயங்கள் காதை செவி­டாக்கி விடும் அபாயம் உண்டு. செவிப்­பறை பாதிப்­புக்­குள்­ளாகும் போது இது நிகழ்­கி­றது. காது­களில் ஏற்­படும் காயங்­க­ளுக்கு விரைந்த பரி­காரம் தேவை.

மூக்கில் ஏற்­படும் தொற்­றுக்கள்

சாதா­ரண தடிமன் முதல் கடு­மை­யான சுவாசத் தொற்று வரை ஏற்­படும் போது மூக்கில் சளி வடிதல் ஏற்­ப­டு­வதை அறி­வீர்கள். இது­த­விர மூக்­குடன் இணைந்­துள்ள சைனஸ் வெற்­றி­டங்­களில் தொற்று ஏற்­ப­டு­வ­துண்டு. மூக்கின் பின்­பு­ற­மாக காற்­ற­டங்­கிய வெற்­றி­ட­மாக மண்டையோட்டின் முக எலும்பின் முற்­பு­ற­மாக சைனஸ் அமைந்­துள்­ளது. நெற்றி, மூக்­கெ­லும்பு, சொக்கு, கண்கள் என்­ப­வற்­றுக்கு பின்­பு­ற­மாக இந்த சைனஸ்கள் அமைந்­துள்­ளன.

இவற்றில் பக்­டீ­­ரியா, வைரஸ், பங்­கசு முத­லான கிரு­மி­களின் தொற்று ஏற்­பட்டு சளிப்­பி­டிக்கும் நிலை­யையே Sinusitis என்று அழைக்­கிறோம். சைனஸ் தொற்று ஏற்­படும் போது மூக்கு அடைப்பு, மூக்கு அரிப்பு, மூக்கால் வடிதல் என்­ப­வற்­றுடன்  தொண்டை நோவும் ஏற்­ப­டலாம். அத்­துடன் மூக்கின் பின்­பு­ற­மாக செல்லும் சளி கார­ண­மாக Post nasal drip ஏற்­ப­டலாம். சுவாசம் நாற்­ற­மு­டை­ய­தாக இருப்­ப­துடன், நோயா­ளியால் மணங்­களை உண­ர­மு­டி­யா­தி­ருக்கும். இருமல், குறிப்­பாக இர­விலும் அதி­கா­லை ­வே­ளை­யிலும் அதி­க­மாக ஏற்­படும். கடு­மை­யான தலை­வ­லி­யுடன் காய்ச்சல் களைப்பு என்­ப­னவும் ஏற்­ப­டலாம். கண்­களின் பின்­பு­ற­மாக வலி எடுக்கும் முகத்­திலும் வலி எடுக்கும். சுவா­சிப்­பதில் சிரமம் இருக்கும்.

சைனஸ் தொற்று ஏற்­பட்­ட­வர்கள் அதிக நீர் அருந்­து­வ­துடன், ஓய்வு எடுக்­க­ வேண்டும். செந்நீர் ஆவி பிடிப்­பது நன்று. சுத்­த­மான நீரினால் முகத்தை கழு­வலாம். குளி­ரான நீரை தவிர்ப்­ப­துடன் சற்று சூடான நீரைப் பயன்­ப­டுத்­தலாம். படுக்கும் போது தலையை உயரமாக வைத்து படுத்தல் நன்று. வைத்தியர் சிபாரிசு செய்யும் உயிரி எதிரி, வலி நிவாரணி, அன்ரிகிஸ்ரமீன் மருந்துகளை தவறாமல் பாவிக்க வேண்டும்.

மூக்கில் கட்டிகள், வளர்ச்சிகள்

மூக்கினதும் சைனஸினதும் உட்புற இழையங்கள் தொற்றினாலோ, ஒவ்வாமையினாலோ அழற்சி யடைவதுண்டு. சிலவேளைகள்  இவ் இழையங்கள் வீக்கமுறுவதுமுண்டு. குறிப்பாக, ஓரிடத்தில் இவ் அழற்சி கட்டியாகி மெதுவாக வளர்வதுண்டு. இவ்வளர்ச்சியை Nasal polyp என்று அழைப்பர்.