வரவு – செலவுத் திட்­டத்­திற்கு சிறு­பான்மைக் கட்­சிகள் ஆத­ரவு; அர­சாங்­கத்­துக்கு கிடைத்த பெரு வெற்றி 

Published By: MD.Lucias

05 Dec, 2015 | 10:41 AM
image

 எமது அர­சாங்கம் முன்­வைத்­துள்ள வரவு – செலவுத் திட்­டத்தை சகல சிறு­பான்மைக் கட்­சி­களும் ஆத­ரித்­தமை அர­சாங்­கத்­திற்கு கிடைத்த மிகப்­பெ­ரிய வெற்­றி­யாகும். இதுவே நல்­லாட்­சியின் சிறந்த எடுத்­துக்­காட்டு என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். வரவு – செலவுத் திட்­டத்தை எதிர்த்து வாக்­க­ளித்­த­தனால் மஹிந்­தவின் திட்­டங்கள் நியா­ய­மா­கி­வி­டாது என்­பதை மஹிந்த அணி­யினர் விளங்­கிக்­கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி ஆகிய கட்­சிகள் இணைந்து முன்­வைத்­துள்ள வரவு – செலவுத் திட்­ட­மா­னது சகல சிறு­பான்மைக் கட்­சி­க­ளி­னாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிலைப்­பாட்டை வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறி­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

இது­வரை காலமும் அர­சாங்­கத்தின் வரவு – செலவுத் திட்­டத்தை எதிர்க்­கட்­சி­களும் சிறு­பான்மைக் கட்­சி­களும் எதிர்த்து வந்­த­தையே பார்த்தோம். அதேபோல் கடந்த காலத்தில் அர­சாங்கம் முன்­வைத்த எந்­த­வொரு திட்­டத்­தையும் தமிழ் கட்­சிகள் ஆத­ரிக்­க­வில்லை. ஆனால் இம்­முறை அவ்­வாறு அல்­லாது வரவு – செலவுத் திட்­டத்தை சிறு­பான்மைக் கட்­சிகள் ஆத­ரித்­துள்­ளன. இது அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்தும் நல்­ல­தொரு செயற்­பா­டாகும். அதேபோல் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போதும் அதன் பின்­னரும் தமிழ், முஸ்லிம் தரப்­புகள் அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்தும் வகையில் தான் செயற்­ப­டு­கின்­றது. இது ஜன­நா­யக ஆட்­சியில் நல்­ல­தொரு எடுத்­துக்­காட்­டாகும். மேலும் இந்த அர­சாங்­கத்தில் அனைத்து மக்­களின் எதிர்­பார்ப்­பு­களும் நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றது என்­பது விளங்­கிக்­கொள்ளக் கூடி­ய­தா­கவே உள்­ளது. ஆகவே இந்த வரவு – செலவுத் திட்­டத்தில் அனைத்து தரப்­பி­னரதும் ஆத­ரவு கிடைத்­தி­ருப்­பது எமக்கு கிடைத்த மிகப்­பெ­ரிய வெற்­றி­யாகும்.

மேலும் இம்­முறை வர­வு-­செ­லவுத் திட்­டத்தை எதிர்த்து வாக்­க­ளித்­துள்ள நபர்­களை பற்­றிய கவலை எமக்கு இல்லை. வழ­மை­யா­கவே மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்­களை ஆத­ரி­ப்ப­தில்லை. ஆகவே இப்­போதும் அவர்கள் எமது வர­வு – -­செ­லவுத் திட்­டத்தை ஆத­ரிப்­பார்கள் என்ற எதிர்­பார்ப்பு எமக்கு இருக்­க­வில்லை.

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இருக்கும் சிலர் இப்­போது தம்மை நியா­யப்­ப­டுத்தி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை விமர்­சித்து வரு­கின்­றனர். எவ்­வாறு இருப்­பினும் இன்று இவர்கள் அனை­வரும் அர­சாங்­கத்தின் வர­வு-­ – செ­லவுத் திட்­டத்தை எதிர்ப்­ப­தனால் முன்­னைய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அனைத்­தையும் சரியென நியாயப்படுத்த முடியாது. கடந்த காலத்தை விடவும் இம்முறை பிரதான இரண்டு கட்சிகளும் ஒன்றி ணைந்து முன்வைத்துள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு- –செலவுத் திட்டமானது மக்களை திருப்திப்படுத்தும் வகையில் தான் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00