கோத்தா மற்றும் வெளிநாட்பிரதிநதிகள் படத்தை பாவிக்கவும் உலகின் அதி­கார சக்­தி­களின் மோதல்­க­ளுக்கு அகப்­பட்டுக் கொள்­ளாமல், இலங்கை நடு­நிலை வகிக்கப் போவ­தாக அறி­வித்­தி­ருந்த ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு, கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சோத­னை­மிக்க ஒரு நாளாக அமைந்­தி­ருந்­தது.

ஏனென்றால், அன்று அவர் ஒரே நாளில், உலகின் மூன்று முக்­கிய அதி­கார சக்­தி­களின் உயர்­நிலைப் பிர­தி­நி­தி­களைச் சந்­திக்க வேண்­டி­யி­ருந்­தது. ரஷ்ய வெளி­வி­வ­கார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ், தெற்கு மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்க வின் உதவி இரா­ஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ், சீன வெளி­வி­வ­கார அமைச்சர் வாங் யி ஆகிய மூவ­ரையும், ஒரே நாளில் குறிப்­பிட்ட சில மணித்­தி­யால இடை­வெ­ளிக்குள் சந்­தித்துப் பேசி­யி­ருந்தார் ஜனா­தி­பதி.


இந்த மூவ­ரி­னது சந்­திப்­பு­களும் ஒரே மாதி­ரி­யா­ன­வை­யாக இருக்­க­வில்லை. மூன்று நாடு­க­ளி­னது இலக்­கு­களும் நோக்­கங்­களும் வேறு­பட்­ட­வை­யாக இருந்­தன. இலங்­கை­யுடன் நெருக்­க­மான உற­வு­களைத் தொடரும் இலக்­குடன் வந்­தி­ருந்தார் அமெ­ரிக்­காவின் உதவி இரா­ஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ்.


இலங்­கை­யுடன் பாது­காப்பு மற்றும் பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்தும் நோக்­கத்­துடன் வந்­தி­ருந்தார் ரஷ்ய வெளி­வி­வ­கார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ். இலங்­கையில் சீனாவின் பொரு­ளா­தார முத­லீ­டுகள் தொடர்­பா­கவும் இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்­பு­களை வலுப்­ப­டுத்திக் கொள்­வது குறித்தும் பேச வந்­தி­ருந்தார் சீன வெளி­வி­வ­கார அமைச்சர் வாங் யி. 

இந்த மூவ­ரி­டமும், இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் பேசப்­பட்ட முக்­கி­ய­மான ஒரு பொதுப்­ப­டை­யான விட­யமும் இருந்­தது. அது. ஐ.நா மனித உரி­மைகள் பேரவை விவ­காரம். ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொடர் அடுத்த மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில், இந்தக் கூட்­டத்­தொ­டரில் இலங்கை அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­யதா என்ற அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்டு அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ளன.


இந்த கூட்­டத்­தொ­டரில், இலங்கை அர­சாங்­கமும் முன்னர் கொடுத்த வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­பட்­டனவா என்ற அறிக்­கையை சமர்ப்­பிக்க வேண்டும்.


ஆனால் ஜெனீவா தீர்­மா­னத்தை ஏற்க முடி­யாது, அதி­லி ­ருந்து விலகி விடுவோம் என்று கூறி­யி­ருந்த ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ, இப்­போது ஜெனீவா தீர்­மானம் தொடர்­பாக உள்­ளக கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கோரி­யி­ருப்­ப­தாக தகவல். விரும்­பியோ விரும்­பா­மலோ இலங்கை அர­சாங்கம் ஜெனீவா கூட்­டத்­தொ­டரில் ஏதோ ஒரு பதிலைக் கூறியே ஆக வேண்­டிய நிலையில் இருக்­கி­றது.


இவ்­வா­றான இக்­கட்­டான நிலையில் இருக்கும் சூழலில், சீன மற்றும் ரஷ்ய வெளி­வி­வ­கார அமைச்­சர்கள், சர்­வ­தேச அரங்கில் குறிப்­பாக ஐ.நா அரங்கில் இலங்­கைக்கு உத­வி­யாக நிற்போம் என்று கூறி­யி­ருக்­கின்­றன.


இலங்­கை மீது மூன்­றா­வது நாடு ஒன்று தலை­யீடு செய்­வதை சீனா அனு­ம­திக்கப் போவ­தில்லை என்று சீன வெளி­வி­வ­கார அமைச்சர் வாங் யி கொழும்­பி­லி­ருந்து புறப்­பட முன்னர் கூறி­யி­ருந்தார். ஆக, ரஷ்­யாவும் சீனாவும் இலங்­கைக்கு ஆத­ர­வாக இருக்கும் நிலையில் இந்­தி­யாவின் ஆத­ர­வையும் பெற்றுக் கொண்டு விட்டால், இந்த முறை ஜெனீவா கூட்­டத்­தொ­டரை சுல­ப­மாக கையாண்டு விடலாம் என்று கணக்குப் போட்­டி­ருக்­கி­றது அர­சாங்கம்.


ஜெனீவா கூட்­டத்­தொ­டரில் அர­சாங்­கத்­துக்கு பெரும் நெருக்­கடி ஏற்­பட வாய்ப்­பில்லை என்று பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவும் கூட, தமிழ் ஊடக ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான சந்­திப்பில் கூறி­யி­ருக்­கிறார். ஆனால் சீன, ரஷ்ய வெளி­வி­வ­கார அமைச்­சர்­களைத் தொடர்ந்து, ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவையும் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவையும் சந்­தித்துப் பேசிய அமெ­ரிக்க  உதவி இரா­ஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ், ஜெனீவா கூட்­டத்­தொடர் குறித்தும் பேசி­யி­ருக்­கிறார்.


அவர் பல முக்­கி­ய­மான விட­யங்கள் குறித்து பேச்சு நடத்­தி­யி­ருக்­கிறார். ஜெனீவா கூட்­டத்­தொ­டரில் அளித்த வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்ற கருத்தை அவர் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.
அத்­துடன் மனித உரி­மைகள்,  பாரா­ளு­மன்றத் தேர்தல், எம்.சி.சி. உடன்­பாடு உள்­ளிட்ட விட­யங்கள் குறித்தும் பேசப்­பட்­டி­ருக்­கின்­றன.


இந்தச் சந்­திப்பில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் கடிதம் ஒன்­றையும் நேரில் கைய­ளித்­தி­ருக்­கிறார் அலிஸ் வெல்ஸ். அந்தக் கடி­தத்தில், இலங்­கை­யு­ட­னான கூட்டு மற்றும் விருப்­பங்கள் குறித்த அமெ­ரிக்­காவின் உறு­திப்­பாடு குறித்து எடுத்துக் கூறப்­பட்­டி­ருந்­தது   என, கொழும்­பி­லி­ருந்து திரும்ப முன்னர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறி­யி­ருந்தார் அலிஸ் வெல்ஸ்.


உண்­மையில் அந்தக் கடி­தத்தின் உள்­ள­டக்கம் என்ன என்­பது இன்­னமும் வெளியே வர­வில்லை. ஆனால் அதில் அர­சாங்­கத்­துக்கு சிக்­க­லான சில விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்க வாய்ப்­புகள் உள்­ளன.
ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவை, உதவி இரா­ஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் சந்­தித்­த­வு­ட­னேயே, அவர் எம்.சி.சி. உடன்­பாடு குறித்து அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுத்தார் என்று செய்­திகள் வெளி­யி­டப்­பட்­டன.


ஆனால் மறுநாள் அர­சாங்கப் பேச்­சா­ள­ரான பந்­துல குண­வர்த்­தன அதனை நிரா­க­ரித்­தி­ருந்தார். அமெ­ரிக்கா அழுத்தம் கொடுக்­க­வில்லை என்று அமெ­ரிக்க அதி­கா­ரிகள் சந்­திப்பை நடத்­தினால் எதிர்­ம­றை­யாக சிந்­திக்கக் கூடாது என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.
எம்.சி.சி. உடன்­பாடு, மனித உரி­மைகள் விவ­காரம் உள்­ளிட்­டவை குறித்து ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருடன் பேசப்­பட்­டதை அலிஸ் வெல்ஸ் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.
அலிஸ் வெல்ஸ் அம்­மை­யா­ருடன், ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் மற்­றொரு அமெ­ரிக்க முக்­கி­யஸ்­தரும் சந்­தித்­தி­ருந்தார். அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் தனிப்­பட்ட பதில் உத­வி­யா­ளரும் தேசிய பாது­காப்புச் சபைக்­கான தெற்கு மத்­திய ஆசி­யா­வுக்­கான மூத்த பணிப்­பா­ள­ரு­மான லிசா கேட்டிஸ் தான் அவர்.


அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்­பிடம் இருந்து, கொண்டு வந்து கொடுக்­கப்­பட்ட கடிதம், அவ­ரது பதில் உத­வி­யாளர் லிசா கேட்டிஸ் சந்­திப்­பு­களில் பங்­கேற்­றது ஆகி­ய­வற்றை வைத்துப் பார்க்கும் போது அமெ­ரிக்­காவும் தீவி­ர­மான நகர்­வு­களை முன்­னெ­டுக்­கி­றது என்­பதை புரிந்து கொள்ள முடி­கி­றது.
இலங்­கையில் ரஷ்யா தனது பாது­காப்பு நலன்­களை விரி­வு­ப­டுத்த நினைக்­கி­றது. அதற்­கான பேச்­சுக்­க­ளிலும் ஈடு­பட்­டுள்­ளது. சீனாவும் முத­லீ­டு­களின் மூலம் இலங்­கையைத் தன் கட்­டுக்குள் வைத்­தி­ருக்க முனை­கி­றது.


இவ்­வா­றான நிலை தொடர்ந்தால், இலங்கை தனது கையை விட்டுப் போய்­விடும் என்ற கவலை அமெ­ரிக்­கா­வுக்கு இருக்­கி­றது. இந்­த­நி­லையில், இலங்­கையை கைக்குள் வைத்­தி­ருப்­ப­தற்கு அமெ­ரிக்கா தரப்பில் இர­க­சிய காய்­ந­கர்த்­தல்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­னவா என்ற சந்­தே­கங்கள் உள்­ளன.
அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்ப் அடுத்­த­மாத இறு­தியில் இந்­தி­யா­வுக்குப் பயணம் மேற்­கொள்ள உத்­தே­சித்­தி­ருக்­கிறார். அவ­ரது பயணத் திகதி இன்­னமும் தீர்­மா­னிக்­கப்­ப­டா­வி­டினும், அதற்­கான பேச்­சுக்கள் இரண்டு நாடு­க­ளி­னதும் இரா­ஜ­தந்­தி­ரிகள் மட்­டத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.
இந்­தி­யா­வுக்கு அடுத்­த­மாத இறு­தியில் மேற்­கொள்­ளலாம் என்று எதிர்­பார்க்­கப்­படும் பய­ணத்தின் போது, அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்ப், இலங்­கைக்கும் ஒரு குறு­கிய பய­ணத்தை மேற்­கொள்­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன.


2016ஆம் ஆண்டு அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா இலங்­கைக்கு வரு­வ­தற்குத் திட்­ட­மிட்­டி­ருந்தார். ஆனால் அவ­ரது பயண ஒழுங்கு நாட்கள் இலங்­கையில் வெசாக் கொண்­டாட்­டங்கள் நடை­பெறும் காலம் என்­பதால், இலங்கை அந்த திக­தி­களை நிரா­க­ரித்­தி­ருந்­தது.
அதற்குப் பின்னர், பராக் ஒபா­மாவோ அல்­லது அவ­ருக்குப் பிறகு அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யா­கிய டொனால்ட் ட்ரம்போ, இலங்­கைக்கு வரும் முனைப்பைக் காட்­ட­வில்லை.


ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர் இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள சூழலில் அமெ­ரிக்கா இன்னும் தீவி­ர­மாகச் செயற்­பட வேண்­டிய நிலையை உணர்த்­தி­யி­ருக்­கி­றது,


அமெ­ரிக்கா தனது நலன்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக, கோத்­தா­பய ராஜபக் ஷ அர­சாங்­கத்­துடன் கைகு­லுக்கிக் கொள்ளத் தயங்­காது.


கோத்­தா­பய ராஜபக் ஷ அர­சாங்­கத்­துடன் கைகோர்த்துக் கொள்­வ­தற்கு, சீனாவோ ரஷ்­யாவோ அல்­லது ஜெனீ­வாவோ தமிழர் விவ­கா­ரங்­களோ தடை­யாக இருப்­பதை அமெ­ரிக்கா விரும்­பாது.
இந்த நிலையில், நிலை­மையை தமக்கு சாத­க­மாக மாற்றிக் கொள்­வ­தற்­காக அடுத்த மாதம் இந்­தி­யா­வுக்கு மேற்­கொள்ளும் பய­ணத்தின் போது ஒரு குறு­கிய நேரப் பய­ணத்தை அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் இலங்­கைக்கு வந்து சென்றால் கூட அது ஆச்­ச­ரி­ய­மில்லை.
தேர்தல் காலத்தில் எம்.சி.சி. உள்­ளிட்ட அமெ­ரிக்­கா­வு­ட­னான உடன்­பா­டுகள் குறித்து மோச­மான விமர்­ச­னங்­களை முன்­வைத்து வந்த தற்­போ­தைய அர­சாங்கம் இப்­போது பெட்டிப் பாம்­பாக அடங்­கி­யி­ருக்­கி­றது.
இதற்கு அமெ­ரிக்கா தரப்­பி­லி­ருந்து கொடுக்­கப்­பட்ட அழுத்­தங்கள் காரணம் என்று பேசப்­பட்­டாலும் அவ்­வாறு எதுவும் இல்லை என்று அர­சாங்­கமே கூறு­கி­றது.


தமிழர் விவ­கா­ரத்­தையோ அல்­லது வேறெந்த விவ­கா­ரத்­தையோ தூக்கி நிறுத்தி தனது நலன்­களை இழக்க அமெ­ரிக்கா விரும்­பாது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், தனது நாட்டினதும் தனது மக்களினதும் பாதுகாப்புத் தான் முக்கியமானது.  அதற்காக வேறெந்த நலன்களைத் துறக்கவும் தயங்காது.


ஒரு பக்கம் அமெரிக்கா, இன்னொரு பக்கம் சீனா, மற்றொரு பக்கம் ரஷ்யா, என்று உலக வல்லாதிக்க சக்திகளின் ஆட்டக் காய்களுக்கு மத்தியில் சிக்கியிருக்கிறது இலங்கை.
இதுபோன்றதொரு நிலை இவ்வளவு குறுகிய காலத்துக்குள் வரும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ நினைத்துக் கூடப் பார்த்திருக்கமாட்டார்.


“புவியியல் ரீதியான மூலோபாய அமைவிடத்தில் இலங்கை இருப்பதால், பல அரசியல் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றைக் கடப்பதற்கான ஒரே வழி, பொருளாதார ரீதியாக வலுவாக இருக்க வேண்டும். பொருளாதார சுதந்திரம் அரசியல் சுதந்திரத்தை உறுதி செய்யும்” என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியிடம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ வெளியிட்ட கருத்தில் இருந்தே அவர் எதிர்கொண்டுள்ள நிலையை புரிந்து கொள்ள முடிகிறது.
- சுபத்ரா