உங்­க­ளுக்கு ஒரு சிறிய சவால் ­உங்­க­ளுக்கு மிகவும் பழக்­க­மான வீட்டு அல்­லது அலு­வ­லக மாடிப்­ப­டி­களில் ஒரு முறை ஏறி இறங்­குங்கள். இதற்கு ஆகும் நேரத்தை குறித்து வைத்துக் கொள்­ளுங்கள். இப்­போது உங்கள் கண்­களில் ஏதேனும் ஒன்றை மட்டும் ஒரு துணியால் கட்டிக் கொள்­ளுங்கள். மீண்டும் அதே படிக்­கட்டில் ஏறி இறங்­குங்கள். இப்­பொ­ழுது ஆகும் நேரத்தைக் கணக்­கி­டுங்கள். இரண்டு முறை ஏறி இறங்­கி­யதுக்கி­டையில் என்ன வேறு­பாட்­டினை உணர்ந்­தீர்கள்?

ஒரு கண்ணை மூடிய நிலையில் ஏறு­வதும் இறங்­கு­வதும் சுல­ப­மாக இருக்­காது. மாடிப்­படி சற்று அரு­கிலோ தொலை­விலோ இருப்­ப­தைப்­போல தோன்­றி­யி­ருக்கும். சில­முறை கால்கள் வழுக்கக் கூட வாய்ப்பு இருந்­தி­ருக்கும். இதற்கு என்ன காரணம்?

Binocular vision எனப்­படும் துணை­வழிப் பார்வை இல்­லா­ததே இதற்குக் காரணம். இரண்டு கண்­களும் நேராக பார்த்த நிலையும் (Straight eyes), முழு­மை­யான பார்வைத் திறன் கொண்ட நிலையும் துணை­விழிப் பார்­வைக்கு மிகவும் அவ­சியம். துணை­வி­ழிப்­பார்வை சீராக இருக்க மூன்று விஷ­யங்கள் சரி­யாக இருக்க வேண்டும்.

* கரு உரு­வாகும் நிலை­யி­லேயே நேராக இருக்கும் கண்கள்

* இரண்டு கண்­க­ளிலும் சம­மான, ஓர­ளவு சீரான பார்வை

* மூளையின் பார்வைப் பகு­தியும் சரி­யாக இருக்க வேண்டும்

பைனா­குலர் விஷன் இல்லை என்றால் வீதியில் மேடு பள்ளம், சுற்­று­வட்டப் பார்வை, காட்­சியின் நீள அகலம் ஆகி­யவை துல்­லி­ய­மாகத் தெரி­யாது. மாறுகண் பிரச்­சினை உள்­ள­வர்­க­ளுக்கு இந்தத் தொந்­த­ர­வுகள் கட்­டாயம் இருக்கும். சிறு வய­தி­லி­ருந்தே இந்தக் குறை­பாடு இருந்து வந்­தி­ருப்­பதால் பெரும்­பா­லான நேரங்­களில் மாறுகண் உடை­யவர் தன் குறை­பாட்டை உணர்ந்­தி­ருக்க மாட்டார். மருத்­துவர் எடுத்துக் கூறும்­போது கூட ‘எனக்கு பிற­வி­யி­லேயே இந்தக் கோளாறு. அதனால் பிரச்­சினை இல்லை’, ‘பரம்­ப­ரையா எங்க தாத்தா, அப்பா, நான்னு எல்­லா­ருக்­குமே மாறு­கண்­ணுதான்’ ‘பார்வை நல்­லாத்­தானே இருக்­குது... மாறுகண் அதிர்ஷ்டம் இல்­லையா’ என்­றெல்லாம் சாதா­ர­ண­மாகக் கூறு­வார்கள்.

எல்லாம் சரிதான். பரம்­ப­ரை­யாக இருப்­ப­தா­லேயே இவை­யெல்லாம் சரி­யா­னது என்று முடிவு செய்­து­விட முடி­யுமா? நிச்­சயம் கூடாது. நடை­மு­றையில் மாறுகண் உடை­ய­வர்கள் சந்­திக்கும் பிரச்­சி­னைகள் ஏராளம். வாக­னத்தில் செல்­லும்­போது பாதையை கடக்­கும்­போது என்று பிற வாக­னங்கள் வரு­வதை கணிப்­பதில் தவ­றுகள் ஏற்­படும்.

ஒரு வாகனம் தள்ளி வரு­கி­றது என்று நினைத்துக் கடக்க நினைப்­பார்கள். உண்­மையில் அது வெகு அருகில் வந்து கொண்­டி­ருக்கும். ஒரு கண்ணில் பார்வை குறை­வாக இருப்­பதால் பறந்து வரும் பூச்சி, தூசிகள் போன்­ற­வற்றால் காயம் ஏற்­ப­டவும் வாய்ப்புள்­ளது.

மாறுகண் எதனால் ஏற்­ப­டு­கி­றது?

பல கார­ணங்கள் இருந்­தாலும் பொது­வான காரணம், ஒரு கண்ணில் மட்டும் அதிக பார்வைக் குறை­பாடு இருந்து, மற்ற கண் ஓர­ள­வுக்கு அல்­லது மிகத் தெளி­வான பார்­வை­யுடன் இருப்­பதுதான். சிறு வய­தி­லேயே பொருத்­த­மான கண்­ணாடி அணிந்து நன்­றாகப் பார்வை தெரியும் கண்­ணினைக் குறிப்­பிட்ட கால அளவில் மறைத்து செய்­யப்­படும் (Occlusion therapy) பயிற்­சி­களை செய்தால் மாறுகண் முழு­வதும் குண­மா­கி­விடும்.

ஒவ்­வொரு கண்­ணையும் மேல் கீழா­கவும் வலது இட­தா­கவும் உட்­புறம் மற்றும் வெளிப்­பு­ற­மா­கவும் திருப்ப 6 தசைகள் உள்­ளன. கண்­களை சம­நி­லையில் நேர்ப்­பார்­வை­யுடன் வைக்க இவை அனைத்தும் போது­மான அளவு ஆற்­ற­லுடன் இருப்­பது அவ­சியம். இதில் ஏதேனும் குறை­பாடு நிகழ்ந்தால் மாறுகண் ஏற்­படும். சில சமயம் கரு வளர்ச்­சி­யின்­போது கண்­களை இயக்கும் தசை­களின் ஒருங்­கி­ணைப்பில் பிரச்­சினை ஏற்­ப­டலாம். மேற்­கூ­றிய இரண்டு சூழ்­நி­லை­க­ளிலும் கண்­ணாடி மற்றும் கண் பயிற்­சி­யினை முயற்­சித்துப் பார்த்­தபின் முழு­வதும் குண­மா­க­வில்­லை­யெனில், அடுத்த கட்­ட­மாக எளிய அறுவை சிகிச்சை மூலம் குணப்­ப­டுத்­தலாம்.

இதில் முக்­கி­ய­மான விஷயம் மாறுகண் அறுவை சிகிச்­சை­களை சிறு­வ­யதில் செய்தால் மட்­டுமே பலன் இருக்கும். ஏன்? வய­தான பிறகு செய்தால் என்ன? என்று நீங்கள் கேட்­கலாம். மாறு­கண்­ணாக இருக்கும் கண்­ணி­லி­ருந்து மூளைக்கு செல்லும் காட்­சிப்­ப­டி­மங்கள் தெளி­வற்­ற­வை­யாக இருப்­பதால் வளரும் பரு­வத்து மூளை வழக்­க­மான பகு­தியில் அவற்றை செயல்­முறைப்படுத்­தாமல் சற்று மாறு­பட்டே அமைத்­தி­ருக்கும். குழந்­தையின் மூளை வளர்ச்சி முழு­மை­ய­டையும் முன்பு கண்­களின் நிலையை மாற்றி அமைத்தால் மூளைப் பகு­தியின் சம­மற்ற நிலை­யையும் சீராக்கி விட முடியும். ஆனால், வய­தான பின்பு அறுவை சிகிச்சை செய்­யும்­போதோ புது­வி­த­மான காட்சி மூளையின் அதே பகு­திக்கு செல்­கி­றது. இதனால் குழப்பம் ஏற்­பட்டு இரண்டு கண்­க­ளிலும் இருந்து வரும் படி­மங்கள் வெவ்­வே­றாகத் தெரிய நேரிடும்.

நோயா­ளிகள், ‘டாக்டர்... எல்லாம் ரெண்டு ரெண்டா தெரி­யுது’ என்­பார்கள். சிறு வயதில் கவ­னிக்­கப்­ப­டாமல் விட்ட மாறுகண் நோயா­ளிகள் பெரி­ய­வர்கள் ஆகும்­போது அறுவை சிகிச்சை மூலம் நேராக்க வேண்டும் என்ற கோரிக்­கை­யுடன் வரு­வார்கள். அழ­குக்­காக என்ற முறையில் (Cosmetic surgery) பெரி­ய­வர்­க­ளான பின்பு மாறு­கண்ணை மாற்றி அமைத்தால் அன்­றாட வாழ்வில் நடப்­பது, உணவு உண்­பது போன்ற செயல்கள் கூட கடி­ன­மா­கி­விடும். எனவே, வய­தான பின்பு மாறு­கண்­ணுக்­கான அறுவை சிகிச்­சை­களைத் தவிர்த்தல் நலம்.

சில குழந்­தை­க­ளுக்கு அவர்­க­ளது இயற்­கை­யான முக வடி­வ­மைப்­பினால் கண்­க­ளுக்­கி­டை­யே­யான இடை­வெளி வழக்­கத்தை விட சற்று அதி­க­மாக இருக்கும். வேறு சில­ருக்கு மேல் இமையும் கீழ் இமையும் உட்­பு­ற­மாக சந்­திக்கும் இடத்தில் தோல் சற்று அதி­கப்­ப­டி­யாக வளர்ந்­தி­ருக்கும். சாதா­ர­ண­மாக பார்ப்­ப­வர்­க­ளுக்கு இத்­த­கைய குழந்­தை­க­ளுக்கு மாறுகண் இருப்­பதைப் போலவே தோன்றும்.

மாறுகண் போல இருக்­கி­றதே என்று பார்ப்­ப­வர்கள் கூறி­னாலோ, பெற்­றோரே உணர்ந்­தாலோ, ஒரு சந்­தேகம் தோன்றி விட்டால் உட­ன­டி­யாக மருத்­து­வ­ரிடம் பரி­சோ­தனை செய்து கொள்ள வேண்டும். இத்­த­கைய மாறுகண் போன்ற தோற்றம் (Pseudosquint) குழந்தை வளர வளர சரி­யா­கி­விடும்.

சிறு­வ­ய­தி­லி­ருந்தே இருக்கும் மாறுகண் பிரச்சினை போக வய­தான பின்பும் பல­ருக்கு மாறுகண் வரலாம்.

நகைத் தொழி­லா­ளர்கள், நுண்­ணோக்­கியை (Microscope) அதிகம் பயன்­ப­டுத்­து­ப­வர்கள் போன்­ற­வர்கள் ஒரு கண்­ணையே அதிகம் பயன்­ப­டுத்­து­வார்கள். பயன்­ப­டுத்­தப்­ப­டாத மற்­றொரு கண் வெளிப்­பு­ற­மாக வில­கிச்­செல்ல நேரும். முறை­யான பயிற்­சிகள் மூலம் இதைத் தவிர்க்­கலாம். பணி நேரம் தவிர வீட்டிலிருக்கும் மற்ற நேரங்­களில் அதிகம் பயன்­ப­டுத்­தாத கண்ணை உப­யோ­கிக்க பயிற்­சிகள் செய்­யலாம்.

இது­த­விர மாறுகண் குறை­பாட்டை உண்­டாக்கும் முக்­கி­ய­மான பிரச்சினை ஒன்று உள்­ளது. அவை நரம்­பியல் கோளா­றுகள். பொது­வாக சர்க்­கரை நோயா­ளிகள் திடீ­ரென்று ஒரு கண் மாறுகண் போல ஆகி­விட்­டது என்றோ, காட்­சிகள் எல்லாம் இரண்­டி­ரண்­டாகத் தெரி­கின்­றன என்றோ, ஒரு கண்ணின் இமை தானா­கவே மூடிக்­கொண்டு விட்­டது என்ன முயற்­சித்தும் திறக்க முடி­ய­வில்லை என்றோ பதறிக் கொண்டே வரு­வார்கள். மூளையின் நரம்­பு­க­ளுக்கு செல்லும் சிறிய இரத்த நாளங்கள் கட்­டுப்­பா­டற்ற சர்க்­கரை நோயால் திடீ­ரென அடைத்துக் கொள்­வதே இதற்கு காரணம்.

தலையில் ஏற்­படும் நீர்க்­கட்­டிகள் (Cysts), புற்­றுநோய்க் கட்­டிகள் இவற்­றாலும் நரம்­பு­களில் அழுத்தம் ஏற்­ப­டலாம். இந்த வகை நோயா­ளி­க­ளுக்கு எந்த நரம்பு அழுத்­தப்­ப­டு­கி­றது என்­பதைக் கண்­டு­பி­டித்து அதற்­கான மூல கார­ணத்­தையும் கண்­ட­றிந்து உட­னடி சிகிச்சை அளித்தால் விரைவில் குண­மா­கி­விடும்.

மாறுகண் என்­பது நோயோ அதிர்ஷ்­டமோ இல்லை. அது வேறொரு பிரச்­சி­னையின் வெளிப்­பாடு. அவ்­வ­ள­வுதான். ஆனால், அதனால் வரும் விளை­வுகள் மற்றும் சமூக அழுத்தம் அதி­க­மா­னது. மாறுகண் உள்ள குழந்­தை­களைக் கண்டால் அலட்­சி­யப்­ப­டுத்­தாமல்  விரைந்து சிகிச்சைக்கு செல்ல வழிகாட்டுவோம்!