(எம்.எப்.எம்.பஸீர்)

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தொடரப்பட்டிருந்த ஊழல் மோசடி வழக்கிலிருந்து இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயந்த ஶ்ரீ பண்டார ஆகியோரை கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று விடுவித்தார்.

கடந்த 2010.05.25 முதல் 2014.ஜூன் மாதம் வரை ஜயம்பதி பண்டா  அரச அச்சகக் கூட்டுத்தாபணத்தின் தலைவராக கடமையாற்றியுள்ளார். இதன் போது 2010.11.22 முதல் ஊடகத்துறை அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல கடமையாற்றியுள்ளார்.  

அமைச்சருக்கு இதன் போது 40 ஆயிரம் ரூபா தொலைபேசி கட்டணம் செலுத்த சட்ட ரீதியாக வழங்கப்பட்டிருந்தது. எனினும் 2012.03.15 முதல் 2012.04.14 வரையினால் காலப்பகுதிக்குரிய கெஹெலியவின் தொலைபேசிக் கட்டணமானது அந்த தொகையைவிட அதிகமாக இருந்துள்ளது. 

அதன்படி அந்த தொலைபேசி கட்டணமான 2 இலட்சத்து 30 ஆயிரத்து 984 ரூபாவை அச்சகம் கூட்டுத்தாபணம் ஊடாக செலுத்தப்ப ட்டுள்ளது. 

அச்சக கூட்டுத்தாபண தலைவரின் உத்தரவுக்கு அமைய  பிரதி முகாமையாளர் ஒருவர் இதனை செலுத்தியுள்ளார்.  அதன்படியே கெஹலிய மற்றும் முன்னாள் அச்சக கூட்டுத்தாபன தலைவருக்கு எதிராக வழக்குத் தககல் செய்யப்பட்டிருந்தது.

இதனைவிட அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டாரவுக்கு மட்டும் எதிராக 7 கோடியே 34 இலட்சத்து 3 ஆயிரத்து 430 ரூபா வரையில் மோசடி செய்தமை தொடர்பில் 14 வழக்குகள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந் நிலையிலேயே குறித்த வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது.