கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பில் நீதிமன்றில் ஆஜராகப் போவதில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பான 12 மனுக்கள் மீதான விசாரணை 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.