பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெருந்தோட்டத்துறைக்கான இணைப்புச் செயலாளராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றையதினம் வழங்கி வைத்தார்.

இந்நியமனத்தின் கீழ் கல்வி, தோட்டஉட்கட்டமைப்பு, சுகாதாரம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு போன்ற பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் முன்னிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.