இந்தியாவில் நிர்மாணிக்கப்படும் உலகின் பிரம்மாண்டமான கிரிக்கெட் மைதானத்தின் புகைப்படத்தை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அமதாபாத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும்  ‘மொடெரா’ கிரிக்கெட் மைதானம்  ஒரு லட்சத்து பத்தாயிரம் இருக்கை வசதிகளை கொண்டது.

தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மைதானமே உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும். இங்கு ஒரு லட்சத்து 24 பேர் அமர்ந்து விளையாட்டை கண்டுரசிக்கலாம். ஆஸ்திரேலியாவின் மைதானத்தை பின்னுக்குத் தள்ளும் விதமாக அகமதாபாத் மைதானம் உருவாகி வருகிறது.

மொத்தம் 11 ஆடுகளங்கள் அமைக்கப்படுகிறது. மழை பெய்தால் 30 நிமிடத்திற்குள் தண்ணீர் வெளியேறும் வகையில் நவீன வடிகால் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. 

அதிநவீன மின் விளக்குகள், அதிக இடவசதி கொண்ட வாகனத்தரிப்பிட வசதி என முற்றிலும் அதிநவீன சிறப்பம்சங்களுடன் இந்த மைதானம் உருவாகி வருகிறது.