மலேசியா கடந்த 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் கலாண்டுப் பகுதியில் 150 கொள்கலன்களில் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை இங்கிலாந்து உட்பட 13 நாடுகளுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக மலேசியா சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட 150 கொள்கலன்கள் 43 பிரான்ஸிற்கும், 42 இங்கிலாந்துக்கும், 17 அமெரிக்காவுக்கும், 11 கனடாவுக்கும், 10 ஸ்பெயினிற்கும் மற்றும் ஏனைய கொள்கலன்கள் ஹொங்கொங், ஜப்பான், சிங்கப்பூர், போர்த்துக்கள், சீனா, பங்களாதேஷ், இலங்கை மற்றும் லிதுவேனியா போன்ற நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மலேசியாவை உலகின் குப்பை தொட்டியாக மாற்றுவதற்கான முயற்சியாகவே இவ்வாறு குப்பைகள் எமது நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படுவதாக அந் நாட்டின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவளை இந்த ஆண்டின் நடுப் பகுதியில் 110 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட குப்பைகள் திருப்பி அனுப்பப்படும்.
அந்த வகையில் 60 கொள்கலன்களை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்ப அந் நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது.
மேலும் கனடா நாட்டுக்கு சொந்தமான 15 கொள்கலன்களும், ஜப்பானுக்கு சொந்தமான 14 கொள்கலன்களும், இங்கிலாந்துக்கு சொந்தமான 9 கொள்கலன்களும் மற்றும் பெல்ஜியத்துக்கு சொந்தமான 8 கொள்கலன்களும் இன்னும் மலேசிய துறைமுகங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மலேசிய சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சர் 'Yeo Bee Yin' தெரிவித்துள்ளார்.
மொத்தமாக 3,737 மெட்ரிக் தொன் கழிவுகளை திருப்பி அனுப்புவது எமது நோக்கம் என தெரிவித்த அவர், நாட்டிலுள்ள 200 க்கும் மேற்பட்ட சட்டவிரோத பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைகள் மூடும் சட்டமூலத்தை கடுமையாக அமுல்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2018 ஆம் ஆண்டில் சீனா பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய தடை விதித்ததிலிருந்து தேவையற்ற குப்பைகளின் கப்பல்கள் தென்கிழக்கு ஆசியாவிற்கு மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே இவ்வாறு பெருமளவான குப்பைகள் மலேசியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM