எமது கட்சி ஜன­நா­யக ரீதியில் செயற்­ப­ட­வில்லை: அனுஷா சந்­தி­ர­சே­கரன்

Published By: Digital Desk 8

20 Jan, 2020 | 12:30 PM
image

மலை­யக மக்கள் முன்­ன­ணியில் தீர்­மா­னங்கள் தனிப்­பட்ட ரீதியில் ஒரு சிலரால் மாத்­தி­ரமே எடுக்­கப்­ப­டு­கின்­றன. எமது கட்சி தற்­போது ஜன­நா­யக ரீதியில் செயற்­ப­டு­வ­தில்லை. சர்­வா­தி­காரப் போக்கே தலை­தூக்­கி­யுள்­ளது என கட்­சியின்  பிரதி செய­லாளர் நாய­கமும் சட்­ட­த்தர­ணி­யு­மான அனுஷா சந்­தி­ர­சே­கரன் தெரி­வித்­துள்ளார்.

அண்­மையில் கொட்­ட­க­லையில் ஒரு ஊடக சந்­திப்­பொன்றில் மலை­யக மக்கள் முன்­ன­ணியின் நிதிச் செய­லாளர் புஸ்பா விஸ்­வ­நாதன், கட்­சியின் எவ்­வித அனு­ம­தி­யு­மின்றி  பிரதி செய­லாளர் நாயகம் அனுஷா சந்­தி­ர­சே­கரன் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடப் போவ­தா­கவும் அத்­தீர்­மா­னத்தால் கட்­சியை சிதைத்­து­விடக் கூடாது என்றும் தெரி­வித்­தி­ருந்தார்.  இதற்கு பதி­ல­ளிக்கும் முக­மா­கவே இவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், மலை­யக மக்கள் முன்­னணி என்­பது சந்­தி­ர­சே­கரன் என்­ப­வ­ரினால் கட்­டி­யெ­ழுப்­ப­ப்பட்ட ஒரு தனித்­து­வ­மான கட்­சி­யாகும். இருந்தபோதும் அன்று கட்சி என்ற ரீதியில் ஒரு ஜன­நா­யகத் தன்மை காணப்­பட்­டது. இன்று அது சிதை­வ­டைந்து வரு­கின்­றது. கட்சி என்ற வகையில் நிதிச் செய­லாளர் என்­ப­வ­ருக்கு ஊட­கங்­களில் அறிக்கை விட முடி­யாது.

பாரா­ளு­மன்­றத்தில் போட்­டி­யி­டு­வது தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் முடிவு எடுக்­கப்­ப­ட­வி­ருந்த நிலையில், அது சாத்­தி­யப்­ப­டாமல் போனது. இருப்­பினும், அண்­மையில் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பெ.இரா­தா­கி­ருஷ்ண­னினால் நடத்தப்பட்ட ஊடக சந்­திப்­பொன்றில் கட்சியில் மூன்று பேருக்கு மாத்­தி­ரமே தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­யுடன் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட முடியும். ஆனால் அனுஷா சந்­திரசேகரன் வேண்­டு­மானால் தனிப்­பட்ட ரீதியில் போட்­டி­யி­டலாம் என தெரி­வித்­தி­ருந்தார்.

மேற்­படி அறி­விப்பு கூட கட்­சியின் யாப்­புக்கு முர­ணா­னது.  ஏனென்றால் கட்சி யாப்­பின்­படி கவுன்சில் தலை­வர்கள், மத்­திய குழு மற்றும் தேசிய சபை என்பன இணைந்து எடுக்­கப்­படும் தீர்­மா­னத்தின் படியே நடக்க வேண்டும். ஆனால் தற்­போது கட்­சியில் சர்­வா­தி­காரப் போக்கே காணப்­ப­டு­கின்­றது. நிதிச் செய­லா­ள­ரி­னாலும் தலை­வ­ரி­னா­லுமே தன்­னிச்­சை­யா­கவே முடி­வுகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றாக கட்­சியில் தொடர்ந்தும் சர்­வா­தி­கார போக்கு  வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வதன் காரணமாகவே மக்கள் மாற்று தரப்பினரை விரும்புகின்றனர். இவை தவிர இளைஞர் யுவதிகளும் இன்று கட்சியில் ஒரு மாற்றத்தையும்  ஒரு சிறந்த இளம் தலைமைத்துவத்தையும் எதிர்பார்க்கின்றனர். எனவேதான் தேர்தலில் களமிறங்க தீர்மானித்துள்ளேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04