இலங்கையை மாலைதீவைப் போன்று சுற்றுலாத்தலமாக மாற்றியமைப்போம் - அருந்­திக பெர்­னாண்டோ

20 Jan, 2020 | 11:39 AM
image

இலங்­கையை மாலை­தீ­வுக்கு சளைக்­காத சுற்­றுலாத் தல­மாக ஆக்­கு­வ­தற்கு எதிர்­பார்க்­கின்றோம். மாலை­தீ­வுடன் போட்­டி­யிட வேண்­டு­மாயின் அழ­கிய தீவுகள் நிறைந்த கற்­பிட்­டியில் சுற்­று­லாத்­து­றை­யினை ஊக்­கு­விக்க வேண்டும்.

மாலை­தீ­வுக்கு சளைக்­காத அதி­ச­யங்கள் கற்­பிட்டி தீவு­களில் இருக்­கின்­றன என சுற்­று­லாத்­துறை ஊக்­கு­விப்பு அமைச்­சரும் புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அருந்­திக பெர்­னாண்டோ தெரி­வித்தார்.  நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை கற்­பிட்டி சுற்­று­லாத்­துறை ஹோட்டல் உரி­மை­யா­ளர்கள் மற்றும் முத­லீட்­டா­ளர்­க­ளுடன் கற்­பிட்­டியில் இடம்­பெற்ற சந்­திப்பின் போதே இரா­ஜாங்க அமைச்சர் இவ்­வாறு கூறினார்.

 அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய இரா­ஜாங்க அமைச்சர்,

கற்­பிட்டி சுற்­று­லாத்­து­றை­யினை ஊக்­கு­விப்­ப­தற்­காக சுற்­றுலா ஊக்­கு­விப்பு அமைச்சு எத­னையும் செய்­ய­வில்லை. தற்­போது இணை­யத்­த­ளங்­களில் இருப்­பது கற்­பிட்டி சுற்­று­லாத்­து­றையில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்­களால் உரு­வாக்­கப்­பட்ட வீடி­யோக்கள் மாத்­தி­ர­மே­யாகும்.  கற்­பிட்டி வர­லாற்று ரீதி­யான பெறு­ம­தி­யுள்ள ஒரு பிர­தே­ச­மாகும். மனித குடி­யேற்­றங்­களில் ஆரம்­ப­மான தம்­ப­ன்னி பூர்­வீக குடி­யேற்றம் அமைந்­தி­ருப்­பதும் இதற்கு அண்­மை­யி­லாகும். நீரில் காணக் கூடிய மிகப்­பெரும் மீனான திமிங்­கிலம், மேட்டு நிலத்தில் காணக்கூடிய மிகப் பெரும் மிரு­க­மான யானை­யையும் சுற்­று­லாப்­ப­ய­ணி­களால் ஒரே பய­ணத்தில் கண்­டு­க­ளிக்கக்கூடிய இடம் இப்­பி­ர­தேசம் மாத்­தி­ர­மே­யாகும்.

இதற்கு மேலாக டொல்பின் மீன்கள், கோரல்கள், பட்­டங்கள் விடும் விளை­யாட்டு உள்­ளிட்ட பல்­வேறு விளை­யாட்­டுக்கள், வில்­பத்து கங்­கே­வாடி பிர­தே­சத்தில் முயல்கள், மான்கள், சிறுத்­தைகள் போன்­ற­வற்­றையும் இப்­பி­ர­தே­சங்­களில் காண முடியும். சுற்றுலாத்துறை அமைந்துள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் சுற்றுலா அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்குமாறு நான் ஜனாதி பதியிடம் கேட்டிருக்கின்றேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right