இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை  சுற்றுலா சென்ற பயணிகள் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா  மாகாணத்தின் பண்டுங் பாரத் நகரில் உள்ள சுற்றுலா தலமான தங்க்குபன் பெராஹு எரிமலையை பார்வையிடுவதற்காக  58 உள்நாட்டு பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த பஸ் சுபாங் மாவட்டத்தில் பாலசாரி வீதியை கடந்து செல்லும் போது சாரதியின் கட்டுபாட்டை இழந்து குறித்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. 

விபத்துக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன் விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.