பதினான்கு வயதுடைய சிறுமியை ஏழு மாத கர்ப்பிணியாக்கிய 23 வயது இளைஞன் அப்புத்தளைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்புத்தளைப் பகுதியின் இதல்கஸ்ஹின்ன தோட்டத்தைச் சேர்ந்த 14 வயது நிரம்பிய சிறுமியே இவ்வாறு கர்ப்பிணியாக்கப்பட்டுள்ளார்.

வயிற்றுவலி காரணமாக அப்புத்தளை அரசினர் வைத்தியசாலையில் மேற்படி சிறுமி அனுமதிக்கப்பட்டபோது, சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள் சிறுமி கர்ப்பவதியென்றும், ஏழு மாதங்களைக் கொண்ட குழந்தை சிறுமியின் வயிற்றில் வளர்வதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, அப்புத்தளைப் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அப்புத்தளை பொலிஸார் இதல்கஸ்ஹின்ன தோட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனை சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளனர்.