நீதிபதிகளின் குரல் பதிவுகள் குறித்து பிரதம நீதியரசர் உரிய நடவடிக்கை எடுப்பாரென நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி குரல் பதிவுகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த குரல் பதிவுகளில் நீதிபதிகள் சிலரின் குரல்பதிவுகளும் அடங்குகின்ற நிலையிலேயே குரல் பதிவுகள் தொடர்பில் பிரதம நீதியரசர் உரிய நடவடிக்கை எடுப்பாரென நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.