எமது அர­சாங்கம்  தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு  நாள் ஒன்­றுக்­கான வேத­ன­மாக ஆயிரம் ரூபா­ வ­ழங்­கு­மாறு கோரி­யுள்­ள­போதும் பெருந்­தோட்ட நிறு­வ­னங்கள் அதனை வழங்க மறுப்பு தெரி­வித்து வரு­கின்­றன. எனவே பெருந்­தோட்ட நிறு­வ­னங்கள் தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­ப­ளத்தை வழங்க முடி­யா­விட்டால் தோட்­டங்­களை அர­சாங்­கத்­திடம் ஒப்­ப­டைக்க வேண்டும் என்று இரா­ஜாங்க அமைச்சர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்­துள்ளார்.

 சனிக்­கி­ழமை நாவ­ல­பிட்டி பகு­தியில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த இல­வச மருத்­துவ முகாம் ஒன்­றுக்கு வருகை தந்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்­த­போதே இதனை அமைச்சர் தெரி­வித்தார்.

 இதன் போது மேலும் கருத்து தெரி­வித்த இரா­ஜாங்க அமைச்சர் மஹிந்­தா­நந்த அளுத்­க­மகே.

பெருந்­தோட்ட நிறு­வ­னங்கள் அர­சாங்­கத்­திடம் கோரும் நிதி­யினை வழங்க அர­சாங்கம் தயா­ராக உள்­ளது. ஜனா­தி­பதி தேர்­தலின் போது தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­ப­ளத்­தினை வழங்­கு­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்தோம். ஆனால் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் எமக்கு வாக்­க­ளிக்­க­வில்லை. இருந்­தாலும் பொறுப்­புள்ள அர­சாங்கம் என்ற அடிப்­ப­டையில் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­ப­ளத்­தினை எதிர்­வரும் மார்ச் முதலாம் திக­தியில் இருந்து வழங்க தீர்­மா­னித்­துள்ளோம். பெருந்­தோட்ட கம்­ப­னிகள் சம்­பள உயர்வை வழங்க முடி­யு­மாக இருந்தால் இருக்க முடியும். முடியா விட்டால் தோட்­டங்­களை அர­சாங்­கத்­திடம் ஒப்­ப­டைத்­து­விட்டு செல்­ல­மு­டியும்.

 பெருந்­தோட்ட நிறு­வ­னங்­களில் காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­களை  தீர்க்க எம்மால் முடியும்.  எமக்கு வரவு செலவு திட்­டத்தை முன்­வைக்க வேண்­டிய தேவை இல்லை. எதிர்­வரும் பொது தேர்தல் வரைக்கும் எமக்­கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர்  முறையான வரவு செலவு திட்டத்தை முன்வைத்து மக்களுக்கான சேவையினை தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம் என தெரிவித்தார்.