தமிழ்­ மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்கள் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும். தமிழ் பேசும் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அது ஒரு முக்­கி­ய­மான விட­ய­மாகும் என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் வலி­யு­றுத்­தினார்.

எமது ஒற்­று­மையை நீங்கள் அனை­வரும் பாது­காக்க வேண்டும். அதில் தான் எமது எதிர்­காலம் தங்­கி­யி­ருக்­கின்­றது.

எமது மக்கள் இந்த நாட்டில் ஏறத்­தாழ மூவா­யிரம் ஆண்­டு­க­ளாக தமது சொந்­தக்­கலை, கலா­சாரம்,  பண்­பாடு, மொழி, சமயம் போன்ற வற்­றைப்­பேணி சிறப்­பாக வாழ்ந்து வந்­தி­ருக்­கின்­றார்கள் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

 திரு­கோ­ண­மலை நக­ர­சபை மண்­ட­பத்தில் நேற்று காலை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் திரு­கோ­ண­மலை மாவட்டக் கிளையின் ஏற்­பாட்டில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டு அவர் உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். 

காலை 10.00 மணி­ய­ளவில் திரு­கோ­ண­மலை காளி­கோயில் முன்­பாக இரா­வ­ண­சேனை மற்றும் பொது அமைப்­புக்கள் ஏற்­பாடு செய்து நடத்­திய பொங்கல் விழா­விலும் கலந்­து­கொண்ட இரா சம்­பந்தன், முன்னாள் மட்டு திரு­மலை மறை­மா­வட்ட ஆயர் கால­நிதி கிங்ஸ்­சிலி சுவாம்­பிள்ளை உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கு இலங்­கா­நேசன் விரு­தினை வழங்கி கௌர­வித்த பின்னர் நக­ர­சபை மண்­ட­பத்தில் நடந்த தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பொங்கல் நிகழ்வில் அவர் உரை­யாற்­றினார்.

இங்கு மேலும் பேசிய சம்­பந்தன் குறிப்­பி­டு­கையில், நாங்கள் தற்­போது முக்­கி­ய­மா­ன­தொரு கால­கட்­டத்தை எதிர்­நோக்­கி­யுள்ளோம். இதில் நாங்கள் அனை­வரும் ஒரு­மித்து ஒற்­று­மை­யாக இருக்க வேண்டும். எமது ஒற்­று­மையில் தான் எல்­லாக்­க­ரு­மங்­களும் தங்­கி­யி­ருக்­கின்­றன.

கடந்த காலங்­களில் தமிழ் மக்கள் ஒரு உறு­தி­யான நிலைப்­பாட்டை ஒற்­று­மை­யாக வெளிப்­ப­டுத்தி வந்­தி­ருக்­கின்­றார்கள். உள்­நாட்­டுத்­த­லை­வர்­களும் பெரும்­பான்மைச் சமூ­கமும் பல வெளி நாட்டு சர்­வ­தேச சமூ­கமும் இந்த நிலைப்­பாட்டைக் கண்டு ஒரு உறு­தி­யான நிலைப்­பாட்­டிற்கு வர­வேண்டும்.

1956ஆம்  ஆண்டு தொடக்கம் ஒரே நிலைப்­பாட்டை தமிழ் மக்கள் எடுத்து வந்­தி­ருக்­கி­றார்கள். அந்த நிலைப்­பாட்டில் இருந்து தவ­ற­மாட்­டார்கள் என்ற நம்­பிக்கை எமக்கு இருக்­கின்­றது.

எமது ஒற்­று­மையை நீங்கள் அனை­வரும் பாது­காக்க வேண்டும். அதில் தான் எமது எதிர்­காலம் தங்­கி­யி­ருக்­கின்­றது.

எமது மக்கள் இந்த நாட்டில் ஏறத்­தாள மூவா­யிரம் ஆண்­டு­க­ளாக தமது சொந்­தக்­கலை, கலா­சாரம், பண்­பாடு, மொழி, சமயம் போன்ற வற்­றைப்­பேணி சிறப்­பாக வாழ்ந்து வந்­தி­ருக்­கின்­றார்கள்.

நாடு சுதந்­தி­ர­ம­டைந்த பொழுது நாங்கள் ஒரு சிறு­பான்மை சமூ­க­மாக இருந்­தி­ருக்­கலாம். ஆனால் அதன் கார­ண­மாக நாங்கள் எங்­க­ளு­டைய தனிப்­பட்ட பாராம்­ப­ரிய பண்­பாட்டை இழக்­க­வில்லை. 

நாட்டில் தமிழ் தேசிய இனம் ஒரு நியா­யத்தின் அடிப்­ப­டையில் ஒரு அந்­தஸ்­தைப்­பெற்று சம­மாக, சமத்­து­வ­மாக வாழ­வேண்டும் என்­பதற்காகத்தான் நாடு சுதந்­திரம் அடைந்த காலம் தொட்டு போராட்­டத்தை பல வழி­களில் மேற்­கொண்டு வந்­துள்­ளனர்.

எமது மக்­களின் அந்­தப்­போ­ராட்டம் இன்னும் முடி­வுக்­கு­வ­ர­வில்லை. ஆனால் போராட்­டத்தை முறி­ய­டிப்­ப­தற்­காக பல்­வேறு அர­சுகள் பல்­வேறு முயற்­சி­களை பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் எடுத்து வந்­துள்­ளன.

தமிழ் மக்­க­ளு­டைய கோரிக்கைள் நீதியின் அடிப்­ப­டையில் நியா­யத்தின் அடிப்­ப­டையில் தங்­கி­யி­ருக்­கின்­றன. அதன் கார­ணத்தின் நிமித்தம் அந்­தப்­போ­ராட்­டங்­களை அவர்­களால் தோற்­க­டிக்க முடி­ய­வில்லை.

இன்­றைக்கு நாங்கள் களைக்­க­வில்லை. நாங்கள் மிகவும் உறு­தி­யாக இருக்­கின்றோம். நாங்கள் மிகவும் தென்­பாக இருக்­கின்றோம்.

எமது மக்கள் மிகவும் தென்­பாக இருக்­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு நாங்கள் மிகவும் கட­மைப்­பட்­ட­வர்­க­ளாக இருக்­கின்றோம்.

எமது மக்கள் 1956ஆம் ஆண்டு தொடக்கம் அந்த நிலைப்­பாட்டை உறுதி செய்து வந்­துள்­ளனர். தமி­ழ­ர­சுக்­கட்சி ஸ்தாபிக்­கப்­பட்ட பிறகு ஒவ்­வொரு தேர்­த­லிலும் தமது நிலைப்­பாட்டை உறு­தி­யாக வெளிப்­ப­டுத்தி வந்­துள்­ளனர். அது பாரா­ளு­மன்றத் தேர்­த­லாக இருக்­கலாம், மாகாண சபைத்­தேர்­த­லாக இருக்­கலாம், உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­த­லாக இருக்­கலாம் மக்கள் மிகவும் உறு­தி­யாக தங்­க­ளது முடிவை தெரி­யப்­ப­டுத்­தி­வந்­துள்­ளனர்.

மக்­களின் ஜன­நா­யக முடி­வுதான் எங்­க­ளது அத்­தி­வாரம். அதுதான் எமது பலம். எமது போராட்­டத்தை சர்­வே­தேச ரீதி­யாக அங்­கீ­க­ரிக்கும் நிலைமை ஏற்­ப­டு­வ­தற்கு அந்த மக்­களின் ஜன­நா­யக முடி­வுதான் கார­ண­மாக இருந்து கொண்­டி­ருக்­கின்­றன.

இன்று எமது மக்­களின் உறு­திப்­பாடு கார­ண­மா­கவும் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்தில் திட­மாக நின்­றதன் கார­ணத்­தி­னாலும் இலங்­கையின் பெரும்­பான்மைத் தலை­மை­களும் சர்­வ­தே­சமும் மக்­களின் நியா­ய­மான முடிவை உணர ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன.

சர்­வ­தேச சமூகம் இந்­தப்­பி­ரச்­ச­னையில் ஈடு­பட்டு இத­னைத்­தீர்ப்­ப­தற்கு தயா­ராக இருக்­கின்­றது. அது மாத்­தி­ர­மல்ல எமது நாட்டில் ஆட்­சி­யிலும் மாறி மாறி­வந்த பெரும்­பான்மை சிங்­க­ளத்­த­லை­வர்கள் இந்­தப்­பி­ரச்­ச­னைக்கு தீர்­வு­கா­ண­வேண்டும் என்ற நிலைப்­பாட்டை உணரும் நிலைமை ஏற்­பட்­டி­ருப்­பது போல் தெரி­கின்­றது. 

தமிழ்­மக்­களின் பிரச்­ச­னைக்­கான தீர்­வா­னது தவிர்க்­க­மு­டி­யா­தது என்ற கருத்தை, நிலைப்­பாட்டை உண­ரத்­த­லைப்­பட்­டி­ருப்­ப­தா­கவே எமக்குத் தோன்­று­கின்­றது.

57ஆம் அண்டு பண்­ட­ர­நா­யக்க செல்­வ­நா­யகம் ஒப்­பந்தம், 87ஆம் ஆண்டு இந்­திய இலங்கை ஒப்­பந்தம், அதற்கு பிறகு 13ஆவது அர­சி­ய­ல­மைப்­புத்­தி­ருத்தம். அதன்­பி­றகு பல கரு­மங்கள் இது­தொ­டர்பில் நடந்­தி­ருக்­கின்­றன. ஜனா­தி­பதி பிரே­ம­தா­சவின் காலத்தில், ஜனா­தி­பதி சந்­தி­ரிக்­காவின் காலத்தில், ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க்ஷவின் காலத்தில் , இந்த ஒவ்­வொரு காலத்­திலும் முயற்­சிகள் மூல­மா­கவும் 13ஆவது அர­சியல் திருத்தம் முன்­னேற்றம் அடைந்­தி­ருக்­கின்­றது. 

நடை­பெற்ற ஒவ்­வொரு முயற்­சியின் மூல­மா­கவும் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களின் அடிப்­ப­டையில் ஒரு நியா­ய­மான அர­சியல் தீர்­வைக்­கண்டு உறு­தி­யான அதி­கா­ரப்­ப­கிர்வை தமிழ் பேசும் மக்­க­ளுக்கு கிடைக்ககூடிய ஒரு நிலைமை இன்று வந்திருக்கின்றது. ஆனால் இறுதியானதொரு முடிவு இன்னும் ஏற்படவில்லை. நாட்டில் நிரந்தரமானதொரு ஆட்சி இல்லாததன் காரணமாக அது எற்படவில்லை. அது நடைபெறுவேண்டும்.

தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமுல்ப்படுத்தப்பட வேண்டும். 

 தமிழ் பேசும் மக்களைப்பொறுத்தவரையில் அது ஒரு முக்கியமான விடயம். நாங்கள் தற்போது முக்கியமானதொரு காலகட்டத்தை எதிர் நோக்கியுள்ளோம். இதில் நாங்கள் அனைவரும் ஒருமித்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். எமது ஒற்றுமையில் தான் எல்லாக்கருமங்களும் தங்கியிருக்கின்றன. எனவும் அவர் வலியுறுத்தினார்.