தொழி­லாளர் தேசிய சங்கம் என்­பது பல அங்­கத்­த­வர்­களைக் கொண்ட ஒரு பெரிய கூட்டுக் குடும்பம் போன்­றது. அதன் ஒற்­று­மையை கட்டிக் காக்க வேண்­டி­யது ஒவ்­வொ­ரு­வ­ரதும் பொறுப்­பாகும். அதே ஒற்­று­மை­யுடன் எதிர்­வரும்  பாரா­ளு­மன்றத் தேர்­தலை வெற்றிக் கொள்ள நாம் தயா­ராக வேண்டும் என தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலைவரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பி. திகாம்­பரம் தெரி­வித்தார்.

தொழி­லாளர் தேசிய சங்கம், தொழி­லாளர் தேசிய முன்­னணி ஆகி­ய­வற்றின் தைப்­பொங்கல் விழா­வுடன் கூடிய மகளிர் அணி மற்றும் முழு­நேர உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான கூட்டம் நேற்று அட்டன் கிறிஸ்­தவ தொழி­லாளர் சகோ­த­ரத்­து­வத்தின் “தொழி­லாளர் பொழில்” கேட்போர் கூடத்தில் தேசிய அமைப்­பாளர் ஜி. நகு­லேஸ்­வரன் தலை­மையில் இடம்­பெற்­றது. மேற்­படி நிகழ்வில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். தில­க­ராஜ், மத்­திய மாகாண சபை முன்னாள் உறுப்­பி­னர்­க­ளான சோ. ஸ்ரீதரன், சரஸ்­வதி சிவ­குரு, எம். உத­ய­குமார் உட்­பட கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள், உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்கள் என பலரும் கலந்து கொண்­டனர்.இந்­நி­கழ்வில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திகாம்­பரம் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

இன்னும் ஒன்­றரை மாதக் காலத்தில் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான திகதி அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது. இது முக்­கி­ய­மான ஒரு தேர்தலாகும். நாம் கடந்த காலங்­களில் மலை­யக மக்­க­ளுக்­காக எத்­த­னையோ வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுத்து வந்­துள்ளோம். அவற்றில் பிர­தா­ன­மா­னது எமது மக்­க­ளுக்­கான தனி வீட்டுத் திட்டமாகும். தலா ஏழு பேர்ச் காணியில் தனி வீடு­களை அமைத்துக் கொடுத்து அவற்­றுக்­கான காணி உறுதிப் பத்­தி­ரங்­க­ளையும் பெற்றுக் கொடுத்­துள்ளோம். 

இந்­திய அர­சாங்கம் வழங்­கிய நான்காயிரம் வீடு­களை கட்டி முடித்­துள்­ள­தோடு, மேலும் பத்தாயிரம் வீடு­களை அமைப்­ப­தற்­கான காணியும் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது. பய­னா­ளி­களின் பட்­டி­யலும் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு நாம் எமது வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுத்து வந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் தற்­போது புதிய பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு நாம் முகங்­கொ­டுக்க தயா­ராகி வரு­கின்றோம். எமது அங்­கத்­த­வர்­களை பிரித்­தெ­டுக்­கவும் எமது மத்­தியில் பிள­வு­களை ஏற்­ப­டுத்தி அர­சியல் இலாபம் தேடு­வ­தற்கும் பலர் பல்­வேறு வித­மான சூழ்ச்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றார்கள். இந்த விட­யத்தில் எமது மக்கள் ஏமாற்றமடைந்து விடக் கூடாது.

தொழி­லாளர் தேசிய சங்கம் என்­பது ஒரு கூட்டுக் குடும்பம் போன்­றது. இதில் கருத்து முரண்­பா­டுகள் இருப்­பது சக­ஜ­மான விடயம் தான் என்­றாலும், எமது பலத்­தையும் ஒற்­று­மை­யையும் நாம் கட்டிக் காப்­பதில் கவனம் செலுத்த வேண்டும். சாதா­ரண தோட்டத் தொழி­லா­ளர்­களின் பிள்­ளை­களை இன்று அர­சியல் அந்­தஸ்­தோடு உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்த பெருமை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு இருக்­கின்­றது. அவர்­களை நாம் மதிக்க வேண்டும். அவர்­க­ளுக்­கான பணி­களை செய்­வ­தற்கு எம்மைத் தயார்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். எம்­மிடம் காணப்­படும் குறை­களை மனம் விட்டுப் பேசி எம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். நான் உயி­ரோடு இருக்கும் வரை இந்த சங்­கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க இடம் கொடுக்க மாட்டேன். மேலும் எந்த வகையிலும் எமது கட்சி சோரம் போக இடங்கொடுக்கவும் மாட்டேன் என்றார்.