பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடிய குரல் பதிவுகள் தொடர்பில் தற்போதைய எம்பிலிபிட்டிய நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

குறித்த வாக்குமூலத்தை நேற்றைய தினம் அவரிடம் பெற்றுக்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசணைக்கு அமைய அமைய நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களில் வெளியான பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளில் நீதிபதி கிஹான் பிலபிட்டியவின் குரல் பதிவுகளும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.