நாட்டில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துமாறு மின் மற்றும் எரிசக்தி அமைச்சு பயனாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக மின்சார தேவையானது 44 ஜிகாவட்டாக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில் 30 சதவீதம் மாத்திரமே நீர் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏனைய 70 சதவீத மின்சார உற்பத்தியானது அனல் மின் நிலையம் மூலமாகவும் மூலமாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.

சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலமான மின் உற்பத்தி முறைகள் தினசரி மின் தேவையில் ஒன்று முதல் இரண்டு சதவீதம் வரை உதவுகின்றன.

இந் நிலையில் நாட்டில் நிலவும் வறண்ட வானிலையினால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டமானது வெகுவாக குறைந்துள்ளது. இதனால் நீர் மூல மின் உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது. 

அதனால் பொது மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதில் பெரும் சிரமதத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், அதனால் மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்குமாறும் மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் சுலக்ஷனா ஜெயவர்தன தெரிவித்தார்.