“பள்ளிவாசலுக்குள்  இந்து முறைப்படி திருமணம்” 

Published By: Digital Desk 4

19 Jan, 2020 | 10:45 PM
image

முஸ்லிம்களின் பள்ளிவாசலில் இந்து மத ஜோடிக்கு இந்துமத முறைப்படி திருமணம் நடைபெற்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேரவல்லி பகுதியில் செயற்பட்டு வருகிறது சேரவல்லி முஸ்லிம் ஜமாத் கமிட்டி. சேரவல்லி ஜமாத்துக்கு கடந்த நவம்பரில் ஒரு இந்துப் பெண்ணிடம் இருந்து கடிதம் வந்துள்ளது.

அதில், கணவரை இழந்த “பிந்து” என்ற பெண் ஒருவர், தன் மகளுக்கு திருமணம் செய்துவைக்க உதவி தேவைப்படுவதாகவும், அதற்கு ஜமாத் கமிட்டி உதவவேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருந்தார்.

இதனையடுத்து, பிந்துவின் மகள் அஞ்சுவுக்கு மசூதியிலேயே திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்யப்பட்டு, திருமணத்தை ஜனவரி 19ம் திகதி இன்று நடத்த திட்டமிட்டது ஜமாத்.

திட்டமிட்டபடி அஞ்சுவுக்கும், சரத் சசி என்பவருக்கும் ஜமாத் கமிட்டியின் முன்னிலையில் இன்று திருமணம் நடைபெற்றது.

பள்ளிவாசலில் நடைபெற்றாலும், இந்து முறைப்படியே இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்காக, பிந்துவின் மகள் அஞ்சுவுக்கு பத்து சவரன் தங்க நகை மற்றும் 2 இலட்சம் ரூபாய் பணம் பரிசாகக் கொடுத்து திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்துள்ளனர் இஸ்லாமியர்கள்.

தங்களிடம் உதவி கோரிய பிந்துவுக்கு அளித்த வாக்குறுதியின்படி, அவரது மகளின் திருமணத்தை விமரிசையாக நடத்தி முடித்திருக்கும் இஸ்லாமியர்களை நாடு முழுவதுமுள்ள மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மணமக்களுக்கும், திருமணத்தை நடத்தி வைத்து ஒற்றுமைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய இஸ்லாமிய பெருமக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரள மக்களின் ஒற்றுமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சேரவல்லி முஸ்லிம் ஜமாத் மசூதி அஞ்சு மற்றும் சரத் ஆகியோரின் திருமணத்தை இந்து மத முறைப்படி நடத்தி வைத்துள்ளது.

புதுமணத் தம்பதிகளுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும், மசூதி நிர்வாகத்தினருக்கும், சேரவல்லி மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யுத்தநிறுத்த அறிவிப்பு வெளியான பின்னரும் இஸ்ரேல்...

2025-01-16 15:10:39
news-image

புற்றுநோயின் பாதிப்பிலிருந்து விடுபடத்தொடங்கியுள்ளேன்- பிரிட்டிஸ் இளவரசி

2025-01-16 14:10:11
news-image

அமெரிக்க இராஜாங்க செயலாளரை யுத்த குற்றவாளி...

2025-01-16 11:21:48
news-image

யுத்த நிறுத்த அறிவிப்பின் பின்னரும் காசாவில்...

2025-01-16 10:42:56
news-image

துயரத்துடனும் நம்பிக்கையுடனும்-காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு கசப்பும் இனிப்பும்...

2025-01-16 07:09:56
news-image

எனது வெற்றியே யுத்தநிறுத்தஉடன்படிக்கையை சாத்தியமாக்கியது –...

2025-01-16 00:32:44
news-image

ஆறுவார கால யுத்த நிறுத்தம் -...

2025-01-16 00:12:39
news-image

தென்னாபிரிக்க தங்க சுரங்கத்திலிருந்து 70க்கும் அதிகமான...

2025-01-15 17:13:04
news-image

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க...

2025-01-15 13:32:17
news-image

யுத்தநிறுத்த உடன்படிக்கையில் இஸ்ரேல் கைச்சாத்திடும் வரை...

2025-01-15 12:31:56
news-image

யுத்தநிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிலையில் இஸ்ரேல்...

2025-01-15 11:11:31
news-image

சீனாவின் ஊடக நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம்...

2025-01-15 10:41:45