சிவனொளிபாத மலையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்ரிக் போத்தல்கள் காணப்படுவதாக மஸ்கெலிய பிரதேச சபை தெரிவித்துள்ளது.

புனித சிவனொளிபாத மலை யாத்திரையில் ஈடுபடும் போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் போத்தல்கள் எடுத்துவருவதை தவிர்க்குமாறு மஸ்கெலிய பிரதேசசபை பக்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தோடு சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக்காலம் ஆரம்பமான ஒரு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் வீசப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட போத்தல்கள் சேகரிக்கப்பட்டதாக பிரதேசசபை சுட்டிக்காட்டிள்ளமை குறிப்பிடத்தக்கது.