காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிசார் மேற்கொண்ட  திடீர் சுற்றிவளைப்பின்போது ஆறு மணித்தியாலங்களில் பிடிவிறாந்து பிறக்கப்பட்டு பொலிசாரால் தேடப்பட்டுவந்த 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் 2690 மில்லிகிறாம் கஞ்சாவுடன் மூவரும் 180 மில்லி கிறாம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவரும் சட்டவிரோதமான முறையில் வாகனம் செலுத்திய 20 பேருமாக 29 பேர் கைது செய்யப்பட்டதாக காத்தன்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை மாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில்  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தலைமையிலான 26 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மெண்டிசின் உத்தரவின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஜெயரட்ணவின் வழிகாட்டலில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.