செல்லக் கதிர்காமம் பகுதியில் 34 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை செல்லக் கதிர்காமம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாணமாக நீராடியமையை தட்டிக்கேட்டப்போதே மேற்படி மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

அத்துடன் இந்த மோதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதுடன், கைதானவர்களை இன்றைய தினம் திசாமஹராம நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, குறித்த 34 பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.